சமையல்:ராகி காபி
Page 1 of 1
சமையல்:ராகி காபி
பீட்ஸா, பர்கர்னு அடிமையா கிடக்குறாங்க எங்க பசங்கனு புலம்புகிற தாய்மாரா நீங்கள்... அப்படின்னா உங்களுக்கான ஸ்பெஷல் தயாரிப்புதான் இந்த ராகி காபி... ஜங்க்ஃபுட் பிரியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்னே சொல்லலாம். இது உடம்புக்கு ஆரோக்கியமானதும்கூட!
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு - 1/4 கிலோ
கருப்பட்டி - 100 கிராம்
ஏலக்கய் பொடி - 1 டீ ஸ்பூன்
செய்முறை:
* கேழ்வரகை ஒரு முறை கழுவி விட்டு, முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
* 12 மணி நேரம் ஊற வேண்டும்.
* அடுத்த நாள், ஊறிய தண்ணீரை வடித்து, அதில் கருப்பட்டி, ஏலக்காய் பொடி சேர்த்துக் கொதிக்க வைத்து அப்படியே குடிக்கவும்.
* ஊறிய கேழ்வரகை 1 கைப்பிடி சாதமும் உப்பும் சேர்த்து வேக வைத்து, ஆற வைக்கவும்.
* வெந்ததை உருட்டி, பழைய சாதத் தண்ணீரில் ஊற வைக்கவும்.
* அடுத்த நாள், அந்த உருண்டையை மோருடன் சேர்த்து, பச்சை வெங்காயம், பச்சை மிளகாய், மோர் மிளகாய் அல்லது மாங்காய் தொட்டு சாப்பிட உடம்புக்கு அத்தனை ஆரோக்கியம்.
ஜங்க்ஃபுட் பிரியர்களுக்கு அதை மறக்க வைக்கிற அதிசய உணவு இது!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum