பெற்றோர்களைப் பிரிந்து வாழ்வதும் நல்லதா? எப்படி?
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
பெற்றோர்களைப் பிரிந்து வாழ்வதும் நல்லதா? எப்படி?
பேசும்போது ஒருவரிடம் குறிப்பிட்டீர்கள், பிள்ளைப்பேறு இல்லாத இந்த நிலையில் நீங்கள் உங்கள் தாய், தந்தையருடன் ஒன்றாக இருக்கக் கூடாது என்று. பொதுவான, ஒரு பிடிமானமான கருத்து என்பது தாய், தந்தையர் இல்லாமல் வாழக்கூடாது என்பது. ஒரு ஆண் அவர்களுடன்தான் வாழ வேண்டும். அப்படியிருக்கையில், உங்களுக்குப் பிள்ளை பேறு உண்டாக வேண்டுமென்றால், தற்பொழுது பிரிந்திருந்துதான் வாழ வேண்டும் என்று குறிப்பிட்டீர்கள். ஒரு தனிப்பட்ட மனிதரைச் சார்ந்த விஷயமாக இருந்தாலும் கூட, அது ஏற்புடையதாக இல்லை. அதை எப்படிச் சொன்னீர்கள்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: அவருடைய ஜாதகத்தில் தாய், தந்தைக்குரிய கிரகம் அவருடைய லக்னத்தில் போய் மறைந்து கிடக்கிறது. அவருடைய ஜாதகத்தைப் பார்த்தபோது, தாய், தந்தை மீது பாசம் உள்ளவர் நீங்கள். ஆனால், அவர்கள் மனசு புன்படும்படி திட்டிக் கொண்டே இருப்பீர்களே? என்று கேட்டதற்கு, அது உண்மைதான் சார், ஆனால் அவர்களை என்னால் பிரிந்திருக்க முடியாது என்று கூறினார்.
உதாரணத்திற்கு அவர் கடக லக்னம் என்று வைத்துக்கொள்வோம். கடக லக்னத்திற்கு லக்னாபதி சந்திரன். அவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி நன்றாகத்தான் இருக்கிறார். ஆனால், அந்த லக்னாதிபதிக்கு 6, 8, 12ல் தாய், தந்தைக்குரிய கிரகங்கள் மறைந்து கிடக்கிறது. அதுமட்டுமல்லாமல் மாதுர்காரகன் சந்திரன் நன்றாக இருந்தாலும், பிதுர்காரகன் சூரியன் கெட்டுப்போய் கிடக்கிறது.
அதனால்தான் அவரிடம் சொன்னேன், நீங்கள் தாய், தந்தையருடன் இருப்பதால் உங்களுடைய ஜாதகப்படி அவர்களுக்கு பாதிப்பு இருக்கிறது. அவர்களுடைய ஜாதகப்படியும் உங்களுக்கு சில பாதிப்புகள் உண்டாகிறது. உங்களுடைய லக்னாபதி சந்திரனும் மறைந்து கிடக்கிறார். லக்னாதிபதி மறைந்திருந்தாலோ, பலவீனமாக இருந்தாலோ, பாவ கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலோ தாய், தந்தையரை விட்டுப் பிரிந்து வரும்போது அவர்களுடைய வளர்ச்சி நன்றாக இருக்கும். அதனால்தான் அவரை தாய், தந்தையரை விட்டுப் பிரிந்து இருங்கள் என்று சொன்னேன்.
அதுமட்டுமல்லாமல், இவருக்கு தற்பொழுது திருமணமும் ஆகிவிட்டது. தற்பொழுதும் மனைவி முன்பாகவே அப்பா, அம்மாவை பேசியிருக்கிறார். இப்படி அவர்களை கேவலமாகப் பேசுவதை விட, அவர்களை விட்டுப் பிரிந்தே இருக்கலாம். அவர்கள் அன்பான, ஆதரவான வார்த்தைகளை விரும்புவார்கள். அவர்களை பாதுகாக்கிறேன் என்று இப்படி செய்வதை விட, அவர்களுடைய சொந்த ஊரிலேயே விட்டுவிட்டு வந்தால் அவர்களும் நிம்மதியாக இருப்பார்கள். நீங்களும் நிம்மதியாக இருப்பீர்கள்.
அதுமட்டுமல்லாமல், தாய், தந்தையை விட்டுப் பிரிவதால் முன்னுக்கு வரும் ஜாதகமெல்லாம் உண்டு. சில பெற்றோர்களுக்கெல்லாம் நான் சொல்வதுண்டு, உங்களுடைய பிள்ளையை கொஞ்ச நாட்களுக்கு வெளியூர் அனுப்புங்கள், வெளிநாடு அனுப்புங்கள், அப்பொழுதுதான் அவருக்கு சிறப்பாக இருக்கும் என்று. ஏனென்றால் சிலருக்கு 10க்கு உரியவன் 8ல் போய் மறைந்திருப்பான். 10 ஆம் இடம் உத்தியோகஸ்தானம். 10க்கு உரியவர் எட்டிலோ, பன்னிரண்டிலோ போய் மறைந்தால் அவர் இருக்கிற நாட்டில், அவர் இருக்கிற மாநிலத்தில் வேலை கிடைக்காது.
ஒரே பிள்ளைங்க, வேறு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா என்றெல்லாம் சிலர் கேட்பார்கள். இதுதாங்க பரிகாரம் என்று சொல்வேன். உங்க பையன் நன்றாக இருக்க வேண்டுமென்றால் அனுப்பி வையுங்கள். கொஞ்ச நாட்களுக்கு அவருக்கு கஷ்டமாக இருக்கும். பிறகு அவரே அங்கிருந்து வரமாட்டார். இதுபோல, நிறைய பேர் போய் நல்ல மாற்றங்கள் வந்திருக்கிறது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» என் வயது 21. நான் பிறந்த நாள்முதல் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள். நான் யாரிடம் அதிக பாசமும், அன்பும் வைத்திருக்கிறேனோ அவர்கள் சீக்கிரமாக பிரிந்து விடுகிறார்கள். இதனால் மனம் உடைந்து போகிறேன். எனக்கு திருமணம் நிகழ்ந்தால் கணவரும் என்னை விட்டுப் பிரிந்து வ
» வந்ததும் வாழ்வதும்
» அந்த விஷயத்தில் ஆண்கள் எப்படி?
» ஷாம்பு எப்படி இருக்க வேண்டும்?
» சல்வார் கமீஸ் எப்படி இருக்க வேண்டும்
» வந்ததும் வாழ்வதும்
» அந்த விஷயத்தில் ஆண்கள் எப்படி?
» ஷாம்பு எப்படி இருக்க வேண்டும்?
» சல்வார் கமீஸ் எப்படி இருக்க வேண்டும்
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum