நிலக்கடலை நிலக்கடலை
Page 1 of 1
நிலக்கடலை நிலக்கடலை
மருத்துவக் குணங்கள்:
எண்ணெய் வித்துக்களில் மனிதர்களுக்கு அதிக அளவில் பயன்படுவது நிலக்கடலை ஆகும். நிலக்கடலையில் ஏகப்பட்ட அளவிற்கு புரோட்டீன் சத்து அடங்கியிருக்கிறது. நாம் உணவு தயாரிக்க பெருமளவில் பயன்படுத்தப்படும் கடலை எண்ணெய் கூட நிலக்கடலையிலிருந்து தான் எடுக்கப்படுகின்றன. கடலை எண்ணெய் பயன்படுத்தினால் அளவிற்கு அதிகமான அளவில் கொலஸ்ட்ரால் உண்டாகின்றது என்பதால் தற்காலத்தில் கடலை எண்ணெயை பலர் தவிர்க்கின்றனர்.
உடம்பு மெலிதாக இருப்பவர்கள் தினம் சிறிது அளவு நிலக்கடலை பருப்பை சாப்பிடலாம். நிலக்கடலை சாப்பிடும்போது நிறைய உலர்ந்த முற்றிய கடலையை சாப்பிடுதல் கூடாது. ஏனெனில் எண்ணெய் சத்து முதிர்ந்த கடலையில் அதிகம் இருப்பதால் அது வாந்தியையும் உண்டு பண்ணிவிடக் கூடும். நிலக்கடலையிலிருந்து பால் எடுத்து பயன்படுத்தலாம்.
கெட்டுப் போகாத சோடையில்லாத நல்ல நிலக்கடலை பருப்பில் நூறு கிராம் எடுத்து ஒரு சல்லடை தட்டில் பரப்பவும். அதன்மீது சுத்தம் செய்யப்பட்ட மணலைப் பரப்பி தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் தட்டில் நிற்காமலும் மண் காயாமலும் ஒரு நாள் முழுவதும் காற்று வெளிச்சம் படும் இடத்தில் வைத்தால் நிலக்கடலை முளைத்து விடும். பொதுவாக முளைத்த தானியங்கள், பயிறுகள், முளைக்காதவைகளை விட ஏழு மடங்கு சத்துக்கள் உடையவை. ஒரு சில சத்துக்கள் மட்டும் 23 மடங்கிற்கு மேல் உயருகின்றன. காற்றிலிருந்தும், தண்ணீரிலிருந்தும் மண்ணின் உதவியுடன் இந்த சத்துக்கள் முளைவிட்ட பயறுகளுக்கு வந்து சேருகின்றன.
நூறு கிராம் எடையுள்ள பருப்பு தண்ணீரிலும், மணலிலும் நனைந்தவுடன் முந்நூறு கிராம் அளவிற்கு எடை அதிகரித்து விடும். இதிலிருந்து பால் எடுத்து உணவுக்காகப் பயன்படுத்தலாம். நிலக்கடலை சாப்பிட்டவுடன் சிறிது அச்சு வெல்லமோ, சர்க்கரையோ சாப்பிட வேண்டும் என்று சிலர் சொல்வதுண்டு. ஏனெனில் சிலருக்கு நிலக்கடலை சாப்பிட்டவுடன் தொண்டை கரகரப்பு ஏற்படலாம். அதற்குத்தான் நிலக்கடலையை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதனால் நமது உடம்பிற்கு நிறைய பலன் கிடைக்கும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» நிலக்கடலை மகசூல் பெருக நிலக்கடலை ரிச்
» நிலக்கடலை சுண்டல்
» நிலக்கடலை சுண்டல்
» மேங்கோ, நிலக்கடலை சாலட்
» மேங்கோ, நிலக்கடலை சாலட்
» நிலக்கடலை சுண்டல்
» நிலக்கடலை சுண்டல்
» மேங்கோ, நிலக்கடலை சாலட்
» மேங்கோ, நிலக்கடலை சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum