தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கர்மா'வில் நடிக்க ஏராளமானோர் விண்ணப்பம்!

Go down

கர்மா'வில் நடிக்க ஏராளமானோர் விண்ணப்பம்!  Empty கர்மா'வில் நடிக்க ஏராளமானோர் விண்ணப்பம்!

Post  ishwarya Tue Mar 19, 2013 6:04 pm

கிரியேடிவ் கிரிமினல் தயாரித்து அர்விந்த் ராமலிங்கம் இயக்கும் 'கர்மா' திரைப்படம் ஆன்லைனில் கலக்கி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் 'கர்மா' திரைப்பட குழுவினர் 'கர்மா'வில் நடிப்பதற்காக முன்னணி நடிகர், நடிகைகளை facebook மூலமாக தேர்வு செய்வதாக அறிவித்து இருந்தனர். அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே ஏராளமானோர் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தனர். கிட்டத்தட்ட 22000-த்திற்கும் மேலானோர் விண்ணப்பித்திருந்தனர், அதில் முதல்கட்டமாக 200 பேர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த 200 பேர்களில் இருந்துதான் படத்தின் நாயகன் மற்றும் நாயகியை தேர்வு செய்ய இருக்கிறார்கள்.

'கர்மா' படக்குழுவினரை மகிழ்ச்சிக்குள் ஆழ்த்திய மற்ற்றொரு விஷயம் என்னவென்றால் 15 நாட்களுக்குள் 'கர்மா' திரைப்படத்தின் facebook பக்கத்திற்கு 2 மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டுள்ளனர். அவற்றில் 7500-க்கும் அதிகமானோர் அப்பக்கத்தை தொடர்கிறார்கள். இப்படத்திற்கான ஆடிசன் வரும் 11 மற்றும் 12 தேதிகளில் சென்னையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் பற்றி இப்படத்தின் இயக்குநர் அர்விந்த் ராமலிங்கம் கூறுகையில், "இந்த தேடலுக்கான ரெஸ்பான்ஸ் மிகவும் அருமையாக இருந்தது. இவ்வளவு பேர் நடிக்க ஆர்வம் உள்ளவர்களா என்று என்னை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. பல பிரபலங்களின் திரை வாரிசுகள்கூட நடிக்க விருப்பம் தெரிவித்து இருந்தது கண்டு வியப்படைந்தேன். அதே சமயம் இவற்றில் ஒருவருக்குதான் வாய்ப்பு கொடுக்க முடியுமே என்று வருத்தமும் அடைந்தேன். அதனால் முதல் கட்ட தேர்வில் தேர்வான 200 நபர்களை கொண்டு புதிதாக படத்தில் ஒரு ஆல்பம் பாடல் சேர்க்க முடிவு செய்துள்ளோம். அதுமட்டுமில்லாமல் எங்கள் திரைப்படத்தில் ஸ்டைல் பார்ட்னராக அங்கம் வகிக்கும் ஒரு நிறுவனம், 10 நபர்களுக்கு மாடலிங் வாய்ப்பும் அளிக்க இருக்கிறது. விண்ணப்பித்திருந்தவர்களுக்கு எங்களால் ஆன சிறு உதவி இது." என தெரிவித்தார். இந்த facebook மூலமாக நடிகர், நடிகைகளை மட்டும் விண்ணப்பிக்க அழைத்திருந்த 'கர்மா' குழுவினருக்கு, படத்தின் தொழில்நுட்ப பிரிவில் பணிபுரிய வாய்ப்பு வழங்குமாறும் பலபேர் விண்ணப்பித்திருக்கிறார்களாம். அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கவும் முடிவு செய்திருக்கிறார்களாம். மார்ச் மாதம் படப்பிடிப்பை துவங்க இருக்கும் 'கர்மா' திரைப்படத்தின் போஸ்டர் டிசைனும் பெரும் வரவேற்ப்பை பெற்று கொண்டிருக்கிறது என்று கூறி மகிழ்ச்சியடைகிறார் இப்படத்தின் இயக்குநர் அர்விந்த் ராமலிங்கம். ஒரு லட்டு திங்க ஒன்றரை டன் பூந்திய கொண்டு வந்து கொட்டுனா எப்டி....?


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum