ஏழை, எளிய விவசாயிகளைக் காப்பாற்றும் ஆடுதுறை 37 நெல்
Page 1 of 1
ஏழை, எளிய விவசாயிகளைக் காப்பாற்றும் ஆடுதுறை 37 நெல்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பல்வேறு குணங்களைக் கொண்ட ஆடுதுறை நெல் ரகங்களைக் கண்டுபிடித்துள்ளது. அதில் அதிக சவுகர்யங்கள் இல்லாத, சிறு விவசாயிகளுக்கு ஏற்றது ஆடுதுறை 37 நெல் ரகமாகும்.
விவசாயி ஒருவரது அனுபவம்:
பொருளாதாரம்:
மூடை விலை ரூ.600 வீதம் 30 மூடை விலை – ரூ.18,000. வைக்கோல் மதிப்பு ரூ.800. சாகுபடி செலவு ரூ.10,000. நிகர லாபம் ரூ.8,000.
கடும் கோடை, வறட்சி போன்ற சூழ்நிலைகளில் ரூ.8,000 லாபத்தைக் கொடுத்த
ஆடுதுறை 37 ரகம் வைகாசி பட்டத்திற்கு சிறந்தது என்பதை காட்டுகின்றது.
-எஸ்.எஸ்.நாகராஜன்
- பொதுவாக கோடையில் நெல் சாகுபடியை செய்வது மிகக் கடினமானது. இந்தக் கோடையிலும் நல்ல பலனைத் தருவது ஆடுதுறை 37 ரகமாகும்.
- சிறு விவசாயிகள் இதனை சாகுபடி செய்யலாம்.
- வைகாசி பட்டத்தில் நெல் சாகுபடி செய்வது சிறிது கடினமானாலும்
வைகாசியும் நெல் சாகுபடி பட்டம்தான். இந்த மாதத்தில் கோடை மழை நல்லபடியாக
பெய்து கிணறுகளிலும் தண்ணீர் இருப்பின் நெல் சாகுபடியை செய்ய முடியும். - மேலும் வைகாசி பட்டத்தில் சாகுபடிக்கு ஏற்ற நெல்ரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
- கடும் இடர்ப்பாடுகளை கொண்ட இப்பட்டத்தில் குறுகிய கால ஆடுதுறை 43
ரகத்தை சாகுபடி செய்ய இயலாது. ஆனால் இதே பட்டத்தில் ஆடுதுறை 43 ரகத்தைவிட
அதிக மகசூலைக் கொடுக்கும் குறுகிய கால ஆடுதுறை 37 ரகம் உள்ளது. - இந்த ரகம் கோடையில் பிரச்னைகளை சமாளிக்கும் திறன் கொண்டதால் இதனை சாகுபடி செய்யலாம்.
- ஆடுதுறை 37 ரகத்தில் நெல் அரவையில் அரிசி அவுட் டேர்ன் 60 சதம் வரை
கிடைக் கின்றது. அரிசி குண்டாக இருக்கும். இதர ரகங்களில் 56 சதவீதம்
கிடைப்பதே சிரமம் ஆகும். - ஆடுதுறை 37 ரகத்திற்கு கிராமங்களில் மதிப்பு இருப்பதற்கு காரணங்கள்
உள்ளன. ஆடுதுறை 37 ரகத்தின் அரிசியை குறுநில விவசாயிகள், கூலி வேலை
செய்பவர்கள் அதிகம் விரும்பு கின்றனர். - கரும்பு அறு வடையின்போது வேலைக்கு அமர்த்தப்பட்ட ஆட்கள் நிலச் சொந்தக்
காரர்களை கூலியாக பணம் கொடுக்காமல் ஆடுதுறை 37 அரிசியை கூலியாக
கொடுக்கும்படி கேட்டுக் கொள்கின்றனர். - ஏழை மக்கள் ஆடுதுறை 37 அரிசியை விரும்புவதற்கு முக்கிய காரணம் இதன் பழைய சோறு கெட்டுவிடாமல் இருப்பதே ஆகும்.
- ஆடுதுறை 37 ரகத்தில் நெல் மகசூல் கணிசமாக இருப்பதோடு வைக்கோல் மகசூலும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஆடுதுறை 36 போன்ற ரகத்தில் ஏக்கரில் 200 பிரி வைக்கோல் கிடைக்கும்போது ஆடுதுறை 37 ரகத்தில் 400 பிரி கிடைக்கின்றது.
- இதர குறுகிய கால ரகங்களைப் போல் ஆடுதுறை 37 ரகம் (வயது 108 நாட்கள்) பூச்சி, வியாதிகளால் தாக்கப்படுவதில்லை.
- இந்த நெல் ரகத்தின் நெல்மணிகள் உருண்டை வடிவத்தில் நல்ல எடை
உள்ளதாகவும் இருப்பதினால் கோடையில் உஷ்ணக் காற்றினால் பாதிக்கப்
படுவதில்லை.
விவசாயி ஒருவரது அனுபவம்:
- கடும் வறட்சி பகுதியில் விவசாயி ஒருவர் வைகாசியில் ஆடுதுறை 37 ரகத்தை
சாகுபடி செய்தார். இவர் வைகாசியில் பின் பகுதியில் நாற்றுவிட்டு ஆனியில்
நாற்றுக்களை வயலில் நட்டார். - ஆடுதுறை 37 ரகத்தில் விதைத்தூக்கம் உள்ளதால் விவசாயி விதையை சற்று கூடுதலாக உபயோகித்தார்.
- நாற்றங் காலில் மூன்றாங்கொம்பு நாற்றாக விதைத்தார். நாற்றங்காலுக்கு
எருக்கந்தழை 6 சால் கலப்பை உழவும், நான்கு சால் பட்லர் ஓட்டியும் கடைசி
உழவின்போது 8 கிலோ டி.ஏ.பி. உரமும் போட்டார். - நடவு வயலில் முன்னால் சாகுபடி செய்யப்பட்டிருந்த உலர்ந்த செடிகள்
அதிகம் இருந்தன. நடவு வயலில் 6 சால் கலப்பை உழவு செய்து வேர்க்கடலை செடிகள்
பூமியில் அமுக்கப் பட்டது.பிறகு 2 சால் பட்லர் உழவு செய்யப்பட்டது. - கடைசி உழவின்போது காம்ப்ளக்ஸ் உரம் 17:17:17 ஏக்கருக்கு 2 மூடைகள் இடப்பட்டன. இதோடு ஏக்கருக்கு அரை மூடை யூரியா இடப்பட்டது.
- பிறகு 30-34 நாட்கள் வயதுடை நாற்றுக்கள் குத்துக்கு இரண்டு நாற்றுக்கள் வீதம் நடப்பட்டன.
- நாற்றினை நடுவதற்கு முன் வயலில் பொடி செய்யப்பட்ட 10 கிலோ ஜிங்க் சல்பேட் தூவப்பட்டது.
- நடவு செய்த 3ம் நாள் ஏக்கருக்கு ஒரு லிட்டர் வீதம் சாட்டர்ன்
களைக்கொல்லி இடப்பட்டது. நடவு நட்ட 10ம் நாள் 20 கிலோ யூரியா, 5 கிலோ
வேப்பம் புண்ணாக்கு, நடவு நட்ட 17ம் நாள் 10 கிலோ யூரியா, 5 கிலோ வேப்பம்
புண்ணாக்கு, நடவு நட்ட 2ம் நாள் ஒரு களை + 10 கிலோ யூரியா + 15 கிலோ
பொட்டாஷ், நடவு நட்ட 40ம் நாள் 20 கிலோ யூரியா + 5 கிலோ பொட்டாஷ்
இடப்பட்டன. - மேற்கண்ட உரங்களை மண் பரிசோதனை செய்து அதில் கிடைத்த சிபாரிசுப்படி விவசாயி இட்டார்.
- பயிர் நட்ட 87வது நாள் அறுவடை செய்யப்பட்டது. ஏக்கரில் 80 கிலோ மூடைகள்
30 (மொத்தம் 2,400 கிலோ) மகசூலாகக் கிடைத்தது. ஏக்கரில் ரூ.800 மதிப்புள்ள
வைக்கோலும் கிடைத்தது.
பொருளாதாரம்:
மூடை விலை ரூ.600 வீதம் 30 மூடை விலை – ரூ.18,000. வைக்கோல் மதிப்பு ரூ.800. சாகுபடி செலவு ரூ.10,000. நிகர லாபம் ரூ.8,000.
கடும் கோடை, வறட்சி போன்ற சூழ்நிலைகளில் ரூ.8,000 லாபத்தைக் கொடுத்த
ஆடுதுறை 37 ரகம் வைகாசி பட்டத்திற்கு சிறந்தது என்பதை காட்டுகின்றது.
-எஸ்.எஸ்.நாகராஜன்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஏழை, எளிய விவசாயிகளைக் காப்பாற்றும் ஆடுதுறை 37 நெல்
» புதிய நெல் பயிர் – த வே ப க நெல் – ஆர் ஓய 3
» புதிய நெல் பயிர் – த வே ப க நெல் – கோ – 50
» நடிகையை காப்பாற்றும் தாதா கதை
» தாஜ்மகாலை காப்பாற்றும் துளசி
» புதிய நெல் பயிர் – த வே ப க நெல் – ஆர் ஓய 3
» புதிய நெல் பயிர் – த வே ப க நெல் – கோ – 50
» நடிகையை காப்பாற்றும் தாதா கதை
» தாஜ்மகாலை காப்பாற்றும் துளசி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum