பிரசன்னா-சினேகா திருமணத் தேதி உறுதியானது!
Page 1 of 1

நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் சென்னையில், மே மாதம் 11-ந் தேதி திருமணம் நடைபெறுகிறது. நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில், முதன்முதலாக ஜோடியாக நடித்தார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் அமெரிக்காவில் நடந்தது. அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதலை, இரண்டு பேருமே முதலில் மறுத்து வந்தார்கள். "நாங்கள் இருவரும் காதலர்கள் அல்ல. நண்பர்கள். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது" என்று கூறி வந்தார்கள்.
2 மாதங்களுக்கு முன்பு பிரசன்னா, "எனக்கும், சினேகாவுக்கும் இடையே காதல் இருப்பது உண்மைதான். நாங்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். எங்கள் இரண்டு பேரின் பெற்றோர்களும் சந்தித்துப்பேசி, திருமணத்தை முடிவு செய்வார்கள்" என்று காதல்-திருமண அறிவிப்பை வெளியிட்டார். அப்போது, சினேகா அமெரிக்காவில் இருந்தார். பிரசன்னாவின் காதல்-திருமண அறிவிப்பை அவர் மறுக்கவில்லை. அதன் பிறகு சினேகாவும், பிரசன்னாவும் சில நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொண்டார்கள். கடந்த மாதம் (பிப்ரவரி) 14-ந் தேதி காதலர் தினத்தன்று இருவரும் ஜோடியாக போட்டோவுக்கு 'போஸ்' கொடுத்தார்கள். காதலுடன், பரிசு பொருட்களை பரிமாறிக் கொண்டார்கள். சினேகாவின் பெற்றோர்களும், பிரசன்னாவின் பெற்றோர்களும் சமீபத்தில் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது, சினேகா-பிரசன்னா திருமணத்தை நிச்சயம் செய்தார்கள். அதன்படி, இருவருக்கும் வருகிற மே 11-ந் தேதி, சென்னை வானகரம் அருகில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில், திருமணம் நடக்கிறது. திருமணத்துக்கான வேலைகள் இப்போதே தொடங்கி விட்டன. "திருமணத்துக்குப்பின், சினேகா விரும்பினால் நடிக்கலாம். விரும்பவில்லை என்றால் நடிப்பதை நிறுத்திக் கொள்ளலாம். அதில், நான் தலையிட மாட்டேன். வாழ்க்கை வேறு, தொழில் வேறு என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்றார் பிரசன்னா. அட்வான்ஸ் வாழ்த்துகள்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரசன்னா-சினேகா 11-ல் திருமணம்
» பிரியாணியில் பிரசன்னா, சினேகா
» ஏப்ரலில் பிரசன்னா, சினேகா திருமணம்
» சினேகா, பிரசன்னா வரவேற்பில் கருணாநிதி
» சினேகா நடிக்க தடை போட மாட்டேன்: பிரசன்னா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum