தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரசன்னா-சினேகா 11-ல் திருமணம்

Go down

பிரசன்னா-சினேகா 11-ல் திருமணம் Empty பிரசன்னா-சினேகா 11-ல் திருமணம்

Post  ishwarya Tue Mar 26, 2013 12:18 pm

திருமணத் தேதியை சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அறிவிக்கும் நட்சத்திர ஜோடி.

சென்னை, ஏப்.30: பிரபல நடிகர் பிரசன்னாவுக்கும், நடிகை சினேகாவுக்கும் சென்னையில் மே 11-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

"விரும்புகிறேன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சினேகா, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

"ஃபைவ் ஸ்டார்' படத்தில் அறிமுகமான பிரசன்னா, தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் "அச்சமுண்டு அச்சமுண்டு' என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது ஏற்பட்ட நட்பு, காதலானதைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

இதையடுத்து இருவருடைய பெற்றோரின் சம்மதத்தோடு இவர்களது திருமணம் மே 11-ம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸில் காலை 9 மணிக்கு திருமணமும் மாலை 7.30 மணிக்கு வரவேற்பும் நடைபெறவுள்ளது. இதுகுறித்து பிரசன்னா, சினேகா ஆகியோர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: இது பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணம் என்றனர்.

திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் தொடர்ந்து நடிக்க பிரசன்னா அனுமதித்திருக்கிறார். ஆனால் நடிப்பதா வேண்டாமா? என்பது குறித்து நான் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றார் சினேகா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum