தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கரும்புப் பயிரில் இரும்பு சத்து பற்றாக்குறை

Go down

கரும்புப் பயிரில் இரும்பு சத்து பற்றாக்குறை Empty கரும்புப் பயிரில் இரும்பு சத்து பற்றாக்குறை

Post  meenu Tue Mar 19, 2013 1:22 pm

கரும்புப் பயிரில் இரும்பு சத்து பற்றாக்குறையை போக்குவதற்கான வழிமுறைகள் பற்றி திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் நா.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அறிகுறிகள்:

இளம் பயிர்களில் புதிதாகத் தோன்றும் இலைகள் பற்றாக்குறை அறிகுறிகளைக் காட்டும் நரம்புப் பகுதிகள் கோடுபோல் இளம் பச்சை நிறத்திலும் நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதிகள் நீண்ட பட்டைகளாக இலையின் அடி முதல் நுனி வரை பொன்நிற மஞ்சளாகத் தெரியும்.
பற்றாக்குறை அதிகமானால் இலைகள் வெளிர் மஞ்சள் நிறமாகிவிடும்
.பச்சையம் குறைந்து ஒளிச்சேர்க்கை பாதிக்கப்படுவதால் பயிர் வளர்ச்சிக் குன்றிவிடும்.

ஏற்படுவதற்கான காரணம்?

கரும்பு அறுவடைக்குப் பிறகு விவசாயிகள் தோகையை எரித்து விடுவதால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் மண்புழுக்களின் எண்ணிக்கை குறைவதோடு இரும்புச்சத்தில் கிடைக்கும் அளவும் குறைந்துவிடுகிறது.
சுண்ணாம்பு அதிகம் உள்ள மண்ணில் மழைக்காலங்களில் இரும்புச்சத்தின் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் சுண்ணாம்பு தூண்டுதலால் ஏற்படக்கூடிய இரும்புச்சத்து பற்றாக்குறை என்பர்.

எப்பொழுது ஏற்படும்?

மறுதாம்பு கரும்புப் பயிரில் இரும்புச்சத்துப் பற்றாக்குறை அதிகமாக பாதிக்கிறது.
இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்கள் மண்ணின் அங்கத்தன்மை, ஈரப்பதம் குறைவதும் மற்றும் சுண்ணாம்புசத்து அதிகரிப்பதால் இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.இதனால் மகசூல் குறைந்துவிடும்.

பாதிப்பு

தண்டு மற்றும் வேர் வளர்ச்சி பாதிக்கப்படும், இளம் இலைகள் வெளுத்துக் காணப்படும், பயிரின் குருத்துகாகிதம் போன்று வெளுத்துக் காணப்படும்
முதிர்ந்த இலைகள் மட்டும் பச்சை நிறத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும், இலைகள் ஆங்காங்கே கருகிக்காணப்படும்
ஒளிச்சேர்க்கை அளவு குறைவதோடு மகசூல் இழப்பும் ஏற்படுகிறது.

நிவர்த்தி

அடியுரமாக ஒரு ஹெக்டேருக்கு 100 கிலோ பெரஸ் சல்பேட்டை இலைகளில் நன்றாகப் படியும்படித் தெளிக்க வேண்டும்.இவ்வாறு தெளிப்பதனால் இரும்புச்சத்து பற்றாக்குறையை கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு பேராசிரியர் மற்றும் தலைவர் நா.ராமமூர்த்தி, உதவிப்பேராசிரியர் சீனி.அன்புமணி, மற்றும் முதுநிலை ஆராய்ச்சியாளர் க.முத்துலட்சுமி தெரிவித்தனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கரும்புப் பயிரில் இரும்பு சத்து பற்றாக்குறை
» கரும்புப் பயிரில் இரும்பு சத்து பற்றாக்குறையை போக்குவதற்கான வழிமுறைகள் பற்றி திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் நா.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். அறிகுறிகள்: இளம் பயிர்களில் புதிதாகத் தோன்றும் இலைகள் பற்றாக்குறை அறிகுறிகளைக்
» அறுவடை பணி ஆட்கள் பற்றாக்குறை: நாமே உருவாகிய ஒரு பிரச்னை
» இரும்பு சத்து மாத்திரைகள்
» கர்ப்பிணிகளை பாதிக்கும் இரும்பு சத்து மாத்திரைகள் - ஆய்வில் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum