ஜப்பான் திரைப்பட விழாவில் விக்ரமை மனம் திறந்து பாராட்டினார்களா?
Page 1 of 1
ஜப்பான் திரைப்பட விழாவில் விக்ரமை மனம் திறந்து பாராட்டினார்களா?
ஜப்பானில் நடந்த ஒசாகா திரைப்பட விழாவில், விக்ரம் நடித்த 'தெய்வத்திருமகள்' படத்துக்கு 2 விருதுகள் கிடைத்தன. விக்ரம் நடித்து, விஜய் அழகப்பன் டைரக்ஷனில் வெளிவந்த படம், 'தெய்வத்திருமகள்'. 5 வயது மனநிலையில் உள்ள ஒரு இளைஞனையும், அவனுடைய பெண் குழந்தையையும் பற்றிய படம் இது. விக்ரமுடன் அனுஷ்கா, அமலா பால், சந்தானம், பேபி சாரா ஆகியோரும் நடித்து இருந்தார்கள். மோகன் நடராஜன் தயாரித்திருந்தார். இந்த படத்துக்கு ஏற்கனவே சில திரைப்பட விழாக்களில் விருதுகள் கிடைத்தன. ஜப்பானில் நடைபெறும் ஒசாகா திரைப்பட விழா விருது, ஆஸ்கார் விருதைப்போல் முக்கியத்துவம் வாய்ந்த விருது ஆகும். இந்த திரைப்பட விழாவில், 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன. 'தெய்வத்திருமகள்' படம், 'காட்ஸ் ஓன் சைல்ட்' என்ற ஆங்கில சப்-டைட்டிலுடன் திரையிடப்பட்டது. திரையிடப்பட்ட படங்களில், 'தெய்வத்திருமகள்,' சிறந்த படம் மற்றும் சிறந்த பொழுதுபோக்கு படம் ஆகிய 2 விருதுகளை பெற்றுள்ளது. விழாவில் நடிகர் விக்ரம், டைரக்டர் விஜய் அழகப்பன் ஆகிய இருவரும் கலந்துகொண்டு, விருதுகளை பெற்றுக்கொண்டார்கள். ஒசாகா திரைப்பட விழாவில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய டைரக்டர் விஜய் அழகப்பன், கூறியதாவது:- "ஒசாகா திரைப்பட விழாவில் உலகின் மிக சிறந்த டைரக்டர்கள், நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டார்கள். அவர்கள் அனைவரும் 'தெய்வத்திருமகள்' படத்தை பார்த்துவிட்டு, படம் முடிந்ததும் இருக்கையை விட்டு எழுந்து நின்று கைதட்டி, பாராட்டினார்கள். குறிப்பாக, விக்ரம் நடிப்பை மனம் திறந்து புகழ்ந்தார்கள். 'அந்நியன்' படம் பார்த்ததன் மூலம் அவருக்கு அங்கே ஏற்கனவே ரசிகர்கள் இருக்கிறார்கள். 'தெய்வத்திருமகள்' படம் அவருக்கு மேலும் ரசிகர் கூட்டத்தை சேர்த்து இருக்கிறது. இந்த விருதுகள், அடுத்த படத்துக்கு மேலும் உழைக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வை எனக்கு அளித்துள்ளன." பட அதிபர் மோகன் நடராஜன் கூறும்போது, "தெய்வத்திருமகள் படத்துக்கு ஒசாகா படவிழாவின் 2 விருதுகள் கிடைத்திருப்பது, தமிழனுக்கு கிடைத்த பெருமை. விக்ரம், அனுஷ்கா, அமலா பால், பேபி சாரா, டைரக்டர் விஜய் ஆகிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். அடடே... பேர் கொழப்பத்தால அப்பா பேர சேத்துட்டீங்க போல.... சரி.. சரி.. ஒங்க டீமுக்கு கூடலின் வாழ்த்துகள் சார்!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கேன்ஸ் திரைப்பட விழாவில்...
» கொரிய திரைப்பட விழாவில் நீர்ப்பறவை
» தெற்காசிய திரைப்பட விழாவில் பீட்சா
» தெற்காசிய திரைப்பட விழாவில் பீட்சா
» கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் பரதேசி
» கொரிய திரைப்பட விழாவில் நீர்ப்பறவை
» தெற்காசிய திரைப்பட விழாவில் பீட்சா
» தெற்காசிய திரைப்பட விழாவில் பீட்சா
» கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் பரதேசி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum