துப்பாக்கி' படப்பிடிப்பு மட்டும் எப்படி நடந்தது? - கேயார்
Page 1 of 1
துப்பாக்கி' படப்பிடிப்பு மட்டும் எப்படி நடந்தது? - கேயார்
தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சினை பூதாகரமாக இருக்கும் நிலையில், இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் சங்கமே இரண்டாக செயல்படுகிறதோ என்று நினைக்க வைத்துள்ளது. தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவர் தியாகராஜன் பத்திரிகையாளர்களை, தயாரிப்பாளர் சங்க கட்டிடத்தின் மாடியில் சந்தித்தார். அப்போது பாலசந்தர் தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சினையில் தலையிட இருப்பதாக தெரிவித்தார். அப்பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்து அனைவருமே கீழே வரும்போது கேயார் தனியாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது கேயார் பேசியது "தற்போது நடைபெற்று வரும் தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். இயக்குநர் பாலசந்தர் இப்பிரச்சினையில் தலையிட இருப்பதால் விரைவில் நல்ல தீர்வு காணப்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் பெப்சி பதவியில் இருந்து பாலசந்தர், பாரதிராஜா இருவருமே கடந்த 19-ம் தேதி விலகிவிட்டனர். பதவியில் இல்லாத போது எப்படி அவர் இந்த பிரச்சினையில் தலையிட முடியும். இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக கருதுகிறேன். 36 நாட்களாக மற்ற படப்பிடிப்புகள் நடைபெறாத போது எப்படி 'துப்பாக்கி' படப்பிடிப்பு மட்டும் நடைபெற்றது என்று தெரியவில்லை. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடையே எவ்வித ஒற்றுமையும் இல்லை என்பதே இதை காட்டுகிறது." என்று தெரிவித்தார். மேலும், தெலுங்கு, கன்னட திரையுலகில் உள்ளது போல், தமிழ்த் திரையுலகிற்கு என்று தனியே ஒரு சங்கம் அமைப்பட வேண்டும் என்றும், 'பெப்சி' சங்கத்தினரே அதன் பெயரை இதற்கேற்றவாறு மாற்றியமைத்துக் கொண்டாலும் சம்மதமே என்றும் அவர் தெரிவித்தார். கேயார், ஜாகுவார் தங்கம் என்று ஒரு பிரிவினரும், தேனப்பன், ஞானவேல்ராஜா என்று ஒரு பிரிவினரும் தயாரிப்பாளர் சங்கத்தின் கீழே நின்று கொண்டு இருந்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. கிழிஞ்சது கிருஷ்ணகிரி... இவுங்ககிட்ட சிக்கி கோலிவுட் சின்னாபின்னமானதுதான் மிச்சம்!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழ் சினிமாவே ஸ்தம்பித்து நிற்கும்போது விஜய் படப்பிடிப்பு மட்டும் எப்படி நடக்கிறது? – கேயார்
» துப்பாக்கி இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்கியது
» விஜய் பட சூட்டிங் மட்டும் எப்படி நடக்கிறது? எதிர் தயாரிப்பாளர்கள் கேள்வி!
» தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார் போட்டி
» எஸ்.ஏ. சந்திரசேகரன் மீது போலீஸில் கேயார் புகார்
» துப்பாக்கி இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்கியது
» விஜய் பட சூட்டிங் மட்டும் எப்படி நடக்கிறது? எதிர் தயாரிப்பாளர்கள் கேள்வி!
» தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார் போட்டி
» எஸ்.ஏ. சந்திரசேகரன் மீது போலீஸில் கேயார் புகார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum