விஜய் பட சூட்டிங் மட்டும் எப்படி நடக்கிறது? எதிர் தயாரிப்பாளர்கள் கேள்வி!
Page 1 of 1

பெப்ஸி
ஸ்டிரைக்கால் பல படங்கள் பாதிக்கப்பட்ட போதிலும், விஜய்யின் துப்பாக்கி பட
சூட்டிங் மட்டும் எப்படி தொடர்ந்து நடக்கிறது? என்று போட்டி அணியை சேர்ந்த
தயாரிப்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்
சங்க பிரச்னை நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. இந்நிலையில்
தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையில் உள்ள தயாரிப்பாளர் சங்க
அலுவலகத்தில் நடந்த அவசரக் கூட்டத்தில் இப்ராகிம் ராவுத்தர்,
தயாரிப்பாளர்கள் கேயார், கே. ராஜன், முரளிதரன், சத்யஜோதி தியாகராஜன்,
எடிட்டர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் அளித்த பேட்டியில், தயாரிப்பாளர் சங்கத்தின்
நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்ட எஸ்.ஏ.சந்திரசேகரன் தரப்பினரை சிறப்புப்
பொதுக்குழு நீக்கியது முற்றிலும் சட்டப்பூர்வமானதே. பொதுக்குழுவில்
நாங்கள் மேற்கொண்ட தீர்மானங்களை சட்டப்படி முறையாக பதிவுத்துறைக்கு
அனுப்பிவிட்டோம். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியன் தலைமையில்
நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஒரு சார்பாக
நடந்துகொண்டார். அவர் பேசியது தயாரிப்பாளர்கள் மத்தியில் பிரிவை
உருவாக்கும் நோக்கத்திலேயே இருந்தது.
பெப்ஸி ஸ்டிரைக்கால் பல படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறாத
சூழ்நிலையில் அவருடைய மகன் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின்
படப்பிடிப்பு மட்டும் தடையில்லாமல் நடைபெற்று வருவதில் இருந்தே இதை
புரிந்துகொள்ளலாம். மேலும் பதவியேற்ற ஆறு மாத காலத்தில் மூன்று மாதங்களை
விடுமுறையிலேயே கழித்துள்ளார் எஸ்.ஏ.சி. அதோடு சக நிர்வாகிகளிடமும் சங்க
ஊழியர்களிடமும் கடுமையாக நடந்து கொண்டார். ஒரே அணியில் உள்ள எங்களிடமே
இப்படி நடந்துகொண்டால் பெப்ஸி அமைப்பினரிடம் இவர் எப்படி பேச்சுவார்த்தையை
சுமுகமாக நடத்துவார்? அதனால்தான் அவரையும் அவருக்கு ஆதரவாக
செயல்படுபவர்களையும் பொதுக்குழுவைக் கூட்டி நீக்கும் சூழ்நிலைக்குத்
தள்ளப்பட்டோம். எஸ்.ஏ.சந்திரசேகரன் தரப்பினரை நீக்கியது பொதுக்குழுவில்
கூடிய 292 தயாரிப்பாளர்களின் ஒட்டுமொத்த முடிவு. அதை மாற்ற முடியாது. இனி
நாங்கள் சார்ந்த அணியினர் சார்பாக ஃபெப்ஸி அமைப்பினருடன் ஊதிய உயர்வு
தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தி பிரச்னையை விரைவில் தீர்ப்போம், என்று
கூறியுள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழ் சினிமாவே ஸ்தம்பித்து நிற்கும்போது விஜய் படப்பிடிப்பு மட்டும் எப்படி நடக்கிறது? – கேயார்
» சூட்டிங் நடக்கும்! நடக்காது!! தயாரிப்பாளர்கள்-பெப்சி மோதல் வலுக்கிறது!!

» என் மகளின் திருமணத்தன்று மண்டபத்திலேயே பல நகைகள் களவு போய்விட்டன. சில மாதங்களுக்குப்பின் என் தங்க வளையல், வைர டாலர் காணாமல் போய்விட்டது. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படித் தொடர்ந்து நடக்கிறது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum