தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மலேசியா பாண்டியனுக்காக மனமிரங்கிய ஸ்ரேயா!

Go down

மலேசியா பாண்டியனுக்காக மனமிரங்கிய ஸ்ரேயா! Empty மலேசியா பாண்டியனுக்காக மனமிரங்கிய ஸ்ரேயா!

Post  ishwarya Tue Mar 19, 2013 12:21 pm

மியாவ் மியாவ் பூனை, குறுக்க நடந்த பூனை என்று விவேகாவை விட்டே மறுபடியும் பாட்டெழுதுகிற அளவுக்கு ஒரு டப்பிங் படத்திற்கு சகுனத்தடை ஏற்படுத்தினார் ஸ்ரேயா. வாங்கிய சம்பளத்திற்கு நடித்தோமா, நடையை கட்டினோமா என்றில்லாமல் தான் நடித்த படத்தை டப்பிங் செய்து வேறு லாங்குவேஜில் வெளியிடக்கூடாது என்று சட்டம் பேசுவதெல்லாம் சரியா? ஆனால் இதையெல்லாம் செய்து கொண்டிருந்தார் ஸ்ரேயா. இவர் மலையாளத்தில் நடித்த 'ராஜா போக்கிரி ராஜா' படம் தமிழிலும் அதே பெயரில் டப் ஆகி வெளிவரப் போகிறது. இதையறிந்த ஸ்ரேயா, இப்படத்தை வாங்கி வெளியிடும் மலேசியா பாண்டியன் என்பவரை எதிர்த்து கோர்ட் வரைக்கும் போவேன் என்று மிரட்டியதோடு பிலிம் சேம்பரிலும் புகார் கொடுத்து விட்டார். (ஒரிஜனல் தயாரிப்பாளர் தாமஸ்) அதோடு விட்டாரா? நடிகர் சங்கத்திலும் ஒரு புகாரை தட்டிவிட்டார். அதன்பின் படத்தை வெளியிடுகிற வேலையை விட்டுவிட்டு பஞ்சாயத்துக்கு அலைவதே பெரிய வேலையாக இருந்தது மலேசியாக்காரருக்கு. இந்த நிலையில்தான் சாமியேறிய ஆத்தா சகஜ நிலைக்கு திரும்பியிருக்கிறது. சாட்சிக்காரர்கள் காலில் விழுவதைவிட ஸ்ரேயாவிடமே பேசிவிடலாம் என்று நினைத்தாராம் மலேசியா பாண்டியன். அதுதான் வொர்க்கவுட் ஆனது இறுதியில். பாண்டியனின் உருக்கமான பேச்சுக்கு செவிமடுத்த ஸ்ரேயா, நோ அப்ஜெக்ஷன் சொல்லிவிட்டார் இப்போது. இவர் மீது கொடுத்திருந்த புகாரையும் வாபஸ் வாங்கிவிட்டார். என்னோட அடுத்த படத்தில் ஸ்ரேயாதான் ஹீரோயின் என்று சொக்காயெல்லாம் ஈரமாகிற அளவுக்கு நெக்குருகி பேசுகிறார் மலேசியா பாண்டியன். ஆடி கறக்காத மாட்ட பாடிக் கறந்துட்டாரே.. பலே கில்லாடிதான்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum