எல்லா நடிகைகளும் எனக்கு ஒன்றுதான்! - ஆர்யா
Page 1 of 1
எல்லா நடிகைகளும் எனக்கு ஒன்றுதான்! - ஆர்யா
ஆர்யா ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், படம் பற்றிய தகவல்களைவிட அதிகமாக, அப்பட நாயகிக்கும் ஆர்யாவிற்கும் காதல் என கிசுகிசுக்கள் வரத் தொடங்கி விடும். 'வேட்டை' படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்த அமலா பாலும் இவரும் நெருங்கி பழகி வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆர்யா தன் புது வீட்டில் தனது நண்பர்களுக்கும், CCL-ல் போட்டியில் விளையாடிய சென்னை அணிக்கும் விருந்து அளித்தார். அவ்விருந்தில் அமலா கலந்து கொள்ளவில்லை. பிரபுதேவா பிரிவிற்கு பிறகு எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதை தவிர்த்து வந்த நயன் இதில் கலந்து கொண்டார். உடனே அமலா பாலை உதறிவிட்டு நயனுடன் கூட்டு சேர்ந்து இருக்கிறார் ஆர்யா என கோலிவுட் கிசுகிசுத்தது. இதற்கு அமலா பால், "ஆர்யாவுக்கும் எனக்குமான நட்பு தொடர்கிறது. அவரோடு நான் தொடர்பில்தான் இருக்கிறேன். ஆர்யா வீட்டில் விருந்து நடந்தபோது நான் துபாயில் இருந்தேன். அதனால்தான் அதில் பங்கேற்க முடியவில்லை" என்று தெரிவித்தார். இது குறித்து ஆர்யாவிடம் கேட்ட போது, "என்னுடன் நடிக்கும் நாயகிகள் அனைவருடன் இணைத்து கிசுகிசுக்கள் வருகின்றன. பூஜா தொடங்கி இப்போது அமலா பால் வரை என்னை இணைத்து கிசுகிசு வருகிறது. எனக்கு அனைவருமே நண்பர்கள்தான். நான் மிகவும் ஜாலியான் ஆள். அனைவருமே எனக்கு ஒன்றுதான். ஒருவர் மட்டும் மிகவும் நெருக்கம் என்று என்னால் தனித்தனியாக பிரிக்க முடியாது. என்னுடைய திருமணம் அனைவருக்கும் தெரிந்து தான் நடக்கும்", என்று தெரிவித்து இருக்கிறார். பாஸ்... நச் ஆளுயா நீர்ர்ர்...! ஃபிகர பிக்கப் பண்ணி ட்ராப் பண்றதெல்லாம் உமக்கு கைவந்த கலையாச்சே...!!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எல்லா நடிகைகளும் ரஞ்சிதா அல்ல! – தமன்னா
» எனக்கு வயது 70. எல்லா கடமைகளையும் முடித்துவிட்டு என் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வயது காரணமாக உடல்நிலை படுத்துகிறது. இந்த வயதான காலத்தில் வெளியே செல்ல பயம்; ஏதேனும் ஆகிவிடுமோ எ ன்கிற கவலைதான். எங்கும் செல்லாமல் செய்யக்கூடிய எளிய பரிகாரங்களைக்
» சேரும் இடம் ஒன்றுதான்!
» எல்லா ஹீரோக்களுக்கும் நான் போட்டிதான்!
» இன்று எல்லா திரையரங்குகளும் மூடல்
» எனக்கு வயது 70. எல்லா கடமைகளையும் முடித்துவிட்டு என் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வயது காரணமாக உடல்நிலை படுத்துகிறது. இந்த வயதான காலத்தில் வெளியே செல்ல பயம்; ஏதேனும் ஆகிவிடுமோ எ ன்கிற கவலைதான். எங்கும் செல்லாமல் செய்யக்கூடிய எளிய பரிகாரங்களைக்
» சேரும் இடம் ஒன்றுதான்!
» எல்லா ஹீரோக்களுக்கும் நான் போட்டிதான்!
» இன்று எல்லா திரையரங்குகளும் மூடல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum