காளான் சூப்
Page 1 of 1
காளான் சூப்
தேவையான பொருள்கள்:
காளான் = 100 கிராம்
பச்சை மிளகாய் = 1
தக்காளி = 100 கிராம்
சின்ன வெங்காயம் = ஒரு கைப்பிடி
வெள்ளை மிளகுத்தூள் = 1 ஸ்பூன்
எண்ணெய் = 1 ஸ்பூன்
பட்டை = 1
கிராம்பு = 2
வெங்காயத்தாள் = 1
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
காளானை இரண்டிரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை துண்டு துண்டாக நறுக்கவும்.
வெங்காயத்தையும் நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தாளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். வதக்கி 4 கப் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு மூடி கொதிக்க விடவும்.
கொதிக்க தொடங்கியதும் காளானை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்க விட்டு கறி வடிகட்டியில் வடிகட்டி அதில் வெள்ளை மிளகுத்தூள், வெங்காயத்தாள் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.
சுவையான காளான் சூப் தயார். அருந்துவதற்கு மிகவும் அற்புதமான சூப்.
மருத்துவ குணங்கள்:
காளானில் கொழுப்பு சத்து மிகவும் குறைவு. மேலும் கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நீர் மற்றும் ஃபைபர் காணப்படுகிறது.
நீரிழிவு உடையவர்கள் காளானை எடுத்து கொள்வதால் தொற்று நோய்கள், வீக்கம் போன்றவை குறைகிறது.
காளானில் இரும்பு, தாமிரம், பொட்டாசியம், செலினியம் இருப்பதால் இரத்த அழுத்தம் குறையும். இரத்த சோகை வராது. நகங்கள், பற்கள், எலும்புகள் வளர்ச்சிக்கு உதவுகிறது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum