வாழைத்தண்டு சூப்
Page 1 of 1
வாழைத்தண்டு சூப்
தேவையான பொருள்கள்:
வாழைத்தண்டு = 1 (சிறிய துண்டு)
சின்ன வெங்காயம் = 6
இஞ்சி = 1 துண்டு
எலுமிச்சை பழம் = பாதி பழம்
மிளகு = 2 ஸ்பூன்
சீரகம் = 1 ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
வாழைத்தண்டை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதனுடன் சின்ன வெங்காயம், இஞ்சி இரண்டையும் நறுக்கி கொள்ளவும். மிளகு, சீரகம் இரண்டையும் நன்கு தட்டி வைத்து கொள்ளவும்.
வாணலியில் நறுக்கிய வாழைத்தண்டு, சின்ன வெங்காயம், இஞ்சி சேர்த்து நீர் விட்டு நன்றாக வேகும் வரை கொதிக்க விடவும். கொதித்ததும் தட்டி வைத்த மிளகு, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
எலுமிச்சை பழத்தை பிழிந்து ஊற்றவும். பிறகு எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டி கொத்தமல்லி இலை தூவி சூடாக பரிமாறவும்.
சுவையான, ஆரோக்கியமான வாழைத்தண்டு சூப் தயார். இந்த சூப் மிகவும் ஆரோக்கியமானது ஆகும்.
மருத்துவ குணங்கள்:
வாழைத்தண்டு குறைவான சர்க்கரை அளவு கொண்டது. சோடியம் குறைவாக மற்றும் வைட்டமின் A, பொட்டாசியம், மற்றும் நார்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக ஊட்டச்சத்து மிக்கது. மலச்சிக்கல் குறைக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தி சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களை குணப்படுத்தும்.
நீர்ச்சுருக்கம், நீர் எரிச்சலை போக்கும். வயிற்றில் இருக்கும் கீரிப்பூச்சிகளை அகற்றும். இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
மது, புகை போன்ற தீய பழக்கங்களால் அடிமையானவர்களுக்கு கல்லீரல் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும். ஈரல் பாதிப்பினால் கண் பார்வை கோளாறு, காமாலை நோய் போன்றவை தாக்கும்.
மேலும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி வலி ஏற்படும். இத்தகைய நோய் இருப்பவர்களுக்கு வாழைத்தண்டு மிகவும் சிறந்த மருந்தாகும். இந்த சூப்பை தினமும் ஒரு வேளை வைத்து குடித்தால் மிகவும் சிறந்தது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum