இன்று பேச்சு வார்த்தைக்கு ஒத்துவரலனா.. மீண்டும் ஸ்ட்ரைக்!: பெப்சி
Page 1 of 1

"இன்று நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தையில் பட அதிபர்கள் கலந்து கொள்ளாவிட்டால், அன்றைய தினமே படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்படும்" என்று சினிமா தொழிலாளர்கள் அறிவித்து இருக்கிறார்கள். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) சார்பில் அதன் தலைவர் எம்.ஏ.ராமதுரை, பொதுச்செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் அங்கமுத்து சண்முகம் ஆகியோர் ஒரு அறிக்கை விடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
"பெப்சி தொழிலாளர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படாததால், தயாரிப்பாளர் சங்கத்தினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிலிம்சேம்பரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அங்கும் சரியான தீர்வு கிடைக்காததால், தயாரிப்பாளர்கள் சங்கத்தினரே தொழிலாளர் நல ஆணையத்தில் முறையிட்டனர். பின்பு தொழிலாளர் ஆணையத்தில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில், பெப்சியை உடைப்போம். புதிய சங்கம் அமைப்போம் என்று தயாரிப்பாளர்கள் பேட்டி அளித்து இருக்கிறார்கள். ஏப்ரல் 30-ந் தேதி வரை பெப்சி தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பை முடித்துக்கொண்டு மே 2-ம் தேதிக்கு பிறகு அவர்கள் அமைக்கவுள்ள புதிய தொழிலாளர் அமைப்புடன்தான் படப்பிடிப்புகள் நடக்கும் என்று விளம்பரம் செய்துள்ளனர். இந்த நிலையில், இன்று தொழிலாளர் நல ஆணையத்தில் நடைபெற உள்ள முத்தரப்பு பேச்சுவார்த்தையில், தயாரிப்பாளர் சங்கத்தினர் கலந்து கொள்ளாவிட்டால், இன்றே பெப்சியின் பொதுக்குழு கூட்டப்பட்டு, படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்படும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தொழிலாளர் நல ஆணையம் முயற்சி எடுத்தும், இந்த பிரச்சினை சுமூகமாக முடிவுக்கு வராத காரணத்தால், தமிழக அரசு தலையிட்டு 25 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வை மீட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இன்னைக்கு என்ன கூத்து நடக்கப்போகுதுனுதான் பாப்போமே........

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மீண்டும் இதே நிலை ஏற்பட்டால், நாட்டைவிட்டு வெளியேறுவேன்- கமல் மீண்டும் பேச்சு
» பெப்சி தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்
» கமலுக்கு தயாரிப்பாளர், நடிகர், பெப்சி, இயக்குநர் சங்கங்கள் ஆதரவு- இன்று கூட்டாக பிரஸ்மீட்!!
» பிரகாஷ்ராஜாவால் மீண்டும் நடிக்க வந்தேன்: நடிகை லட்சுமி பேச்சு
» பெப்சி வேலை நிறுத்தம் முடிந்தது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum