என்னை மிகவும் பாதித்த சம்பவம்தான் '3': ராதிகா
Page 1 of 1
என்னை மிகவும் பாதித்த சம்பவம்தான் '3': ராதிகா
தனுஷ் - ஸ்ருதி நடித்து வெளியாகியுள்ள '3' படம் பார்த்தேன், அது என்னை மிகவும் பாதித்துவிட்டது. இதே போன்றதொரு இளைஞனின் கதை எனக்குத் தெரியும், என்று கூறியுள்ளார் ராதிகா சரத்குமார். இந்தப் படத்தை நேற்று பார்த்த ராதிகா, உடனடியாக படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யாவைப் பாராட்டினார். இதுகுறித்து அவர் கூறுகையில், '3' படத்தில் தனுஷின் கதாபாத்திரத்தைப் போன்று தான் என்னுடைய ஆடை அலங்கார நிபுணர் ஒருவருக்கு மன நோய் வந்துவிட்டது. இந்த நோயிலிருந்து வெளிவர முடியாமல் அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார். தனுஷின் கதாபாத்திரத்தைப் பார்த்ததும் அந்த இளைஞனின் நினைவுதான் எனக்கு வந்தது. என்னை மிகவும் பாதித்த சம்பவம் அது. மிகவும் உணர்வுப் பூர்வமான கதையை ஐஸ்வர்யா தேர்வு செய்து இயக்கியுள்ளார். பெரிய துணிச்சல் வேண்டும். காட்சிகளை மிக கச்சிதமாக அமைத்துள்ளார். தனுஷும், ஸ்ருதியும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்," என்றார். மேலும் படம் குறித்த தனது கருத்துக்களை ட்விட்டரிலும் எழுதியுள்ளார். இயக்குநராக ஐஸ்வர்யாவின் திறமை குறித்து ரஜினியிடம் பேசியபோது, அவர் மிகவும் மகிழ்ந்ததாகவும் ராதிகா குறிப்பிட்டுள்ளார். ஐஸ் மனச டச் பண்ணிட்டீங்க மேடம்!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 3 படம் மிகவும் பாதித்தது : ராதிகா
» எச்.ஐ.வி-எய்ட்ஸ் பாதித்த ஆயிரம் குழந்தைகளை தத்தெடுக்கும் கமல்!
» மாலை வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள். அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உ
» தாண்டவத்தை பாதித்த மழை
» மழை பாதித்த நெற்பயிர்கள் வளர வழிமுறை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum