அதிக வரி கட்டிய 'கான்'கள்!
Page 1 of 1
அதிக வரி கட்டிய 'கான்'கள்!
கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் (2011-12) பாலிவுட் நடிகர்கள் பலர் அதிக அளவில் வருமான வரி செலுத்தியுள்ளனர். இவர்களில் ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் ஆகிய இருவரும் தலா ரூ.15 கோடி வரி செலுத்தி முன்னிலையில் உள்ளனர். ஷாருக் கான் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 20 சதவீதம் குறைவாக வரி கட்டி இருக்கிறார். அதே சமயத்தில் சல்மான் கான் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 20 சதவீதம் கூடுதல் வரி செலுத்தியுள்ளார். கடந்த ஆண்டு 2 படங்களில் நடித்த ஷாருக் ஒவ்வொரு படத்துக்கும் ரூ.30 கோடி முதல் ரூ.35 கோடி வரை சம்பளம் வாங்கினார். 2011-12-ல் நடிகர் அமிதாப் பச்சன் ரூ.7 கோடி வரி செலுத்தி இருக்கிறார். எனினும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 10 சதவீதம் வரி குறைவாகவே கட்டி இருக்கிறார். அமிதாப் பச்சன் வருமானத்தின் பெரும் பகுதி கோன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சி மூலமாகவே அவருக்கு கிடைத்தது. நடிகர் சைப் அலிகான் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் இந்த ஆண்டு தலா ரூ.7 கோடி வரி செலுத்தி உள்ளனர். பரவால்லயே......
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இரவில் அதிக நேரம் உழைக்கும் ஐடி, பிபீஓ ஊழியர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு
» அதிக ரன்-அதிக விக்கெட்: கோலி, வினய்குமார் முதல் இடம்
» ளை கட்டிய பயறு சாலட்
» குழந்தைகள் கட்டிய நேருபாலம்
» கடலுக்கு கரை கட்டிய பிரபு சாலமன்
» அதிக ரன்-அதிக விக்கெட்: கோலி, வினய்குமார் முதல் இடம்
» ளை கட்டிய பயறு சாலட்
» குழந்தைகள் கட்டிய நேருபாலம்
» கடலுக்கு கரை கட்டிய பிரபு சாலமன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum