உலகின் மிகவும் விருப்பத்துக்குரிய பெண் ஜெனிபர் லோரன்ஸ்!
Page 1 of 1
உலகின் மிகவும் விருப்பத்துக்குரிய பெண் ஜெனிபர் லோரன்ஸ்!
0
jennifer lawrenceஉலகின் மிகவும் விருப்பத்துக்குரிய பெண்ணாக ஹொலிவூட் நடிகையான ஜெனிபர் லோரன்ஸ் தெரிவாகியுள்ளார். 22 வயதான இவர் ஆண்கள் இணையத்தள இதழான ஆஸ்க் மென்.காம் நடத்திய கணக்கெடுப்பில் இந்தப் பெருமையைப் பெற்றுள்ளார்.
மிகவும் அழகான ஜெனிபர், ஆண்கள் மத்தியில் தனக்கென தனி இடம் வைத்திருப்பவர். மிகவும் எளிமையான இவருக்குத்தான் இப்போது அதிகமானோர் வாக்களித்து உலகிலேயே அதிக விருப்பத்துக்குரிய பெண்ணாக தெரிவு செய்துள்ளனர். இதில் ஜெனிபருக்கு ஆதரவாக 20.4 இலட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.
ஜெனிபர் தொடர்பில், வாக்கெடுப்பு நடத்திய மேற்படி இணையதளத்தின் ஆசிரியர் ஜேம்ஸ் பாஸில் கூறுகையில், ‘மற்றவர்களை விட ஜெனிபருக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. அவர் ரொம்ப புத்துணர்வு மிக்கவர். எந்த வதந்தியிலும் சிக்காதவர். அதுவே அவருக்கு நிறைய ஆதரவாளர்களைத் திரட்டிக் கொடுத்து விட்டது’ என்றார்.
இந்த வாக்கெடுப்பில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பவர் ஹொலிவூட் நடிகை மிலா குனிஸ். மூன்றாவது இடத்தில் பிரபல மொடல் அழகி கேட் உப்டன் உள்ளார். நான்காவது இடம் கருப்பழகியாக வர்ணிக்கப்படும் ரிஹானாவுக்கு கிடைத்துள்ளது. நடிகை எம்மா ஸ்டோன் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
பிரபல தொலைக்காட்சி நடிகையான சோபியா வெர்கரா, கடந்த ஆண்டு வெற்றியாளராக மகுடம் சூட்டியிருந்தார். ஆனால் இந்த முறை அவர் 12ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டார். இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமாவும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு 48ஆவது இடம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உலகின் மிகவும் செக்சியான பெண்: 4-வது முறையாக கத்ரினா கைப் தேர்வு
» என்னை பெண் பார்க்க வருபவர்கள் மிகவும் நம்பிக்கையாகப் பேசுவார்கள். ஆனால் அவர்கள் எடுக்கும் முடிவு ஏமாற்றமாக இருக்கும். அடுத்தடுத்து நாலைந்து முறை இதுபோல ஏமாற்றத்துக்குள்ளாகி விட்டதால், எங்கள் வீட்டிலுள்ளோர் மிகுந்த கவலையுடன் இருக்கிறார்கள். திருமணம் விரைவ
» ஜெனிபர் ஜெனிபர்
» மாலை வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள். அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உ
» Chennai புதன்கிழமை, ஆகஸ்ட் 22, 9:18 AM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி மருமகளும் மகள் தான் சில குடும்பங்களில் மகனுக்கு பெண் தேடுகிறார்கள். தனது மகனின் அந்தஸ்திற்கு பொருத்தமான பெண் வேண்டும் என்று, பெண்ணிடம் பல்வேற

Permissions in this forum:
You cannot reply to topics in this forum