சமையல்:மல்ட்டி கலர் வைட்டமின் கூட்டு
Page 1 of 1
சமையல்:மல்ட்டி கலர் வைட்டமின் கூட்டு
தர்ப்பூசணி பழத்தை சாப்பிட்ட பின் தூக்கி வீசப்படும் வெள்ளை துண்டுகளை வீணாக்காமல் கூட்டு செய்து குழந்தைகளுக்குப் பிடித்த விதத்தில் கலர்ஃபுல்லாக கொடுத்தால் சத்தமில்லாமல் சாப்பிடுவார்கள். சத்து நிறைந்த சுவையான கூட்டை சந்தோஷத்தோடும் பரிமாறுங்கள்...
தேவையானவை:
தர்ப்பூசணி துண்டுகள் (வெள்ளை பாகம்) - 2 கப்
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
பயத்தம் பருப்பு - 1/4 கப்
கடலைப்பருப்பு - 2 டீ ஸ்பூன்
மிளகு - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீ ஸ்பூன்
தேங்காய்த் துருவல் (விருப்பப்பட்டால்) - 4 டீ ஸ்பூன்
கேரட் துண்டு, பட்டாணி (பச்சை) - 1/4 கப்
செய்முறை:
* பயத்தம் பருப்பையும், கடலைப் பருப்பையும் சுத்தம் செய்து 1/2 கப் தண்ணீர் விட்டு, தர்ப்பூசணி துண்டுகளை அதில் போட்டு குக்கரில் வேகவிட்டு எடுக்கவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், மிளகாய்வற்றல் இவற்றை வறுத்து, அரைத்து எடுக்கவும்.
* அதே எண்ணெய் கடாயில் கடுகை வெடிக்கவிட்டு, பெருங்காயம் சேர்த்து, பச்சை பட்டாணி, கேரட் துண்டுகள் (மெலிதாக நறுக்கியது) சேர்த்து 1 நிமிடம் வதக்கியதும், வேக வைத்துள்ள தர்ப்பூசணி, பருப்பு கலவையைச் சேர்த்து, உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
* கொதித்து வரும்போது அரைத்து வைத்துள்ள கலவையைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் தீயை நிறுத்திவிடவும்.
* கறிவேப்பிலை கிள்ளிப் போடவும்.
* தேங்காய் துருவல் சேர்த்தால் கூடுதல் ருசியைக் கொடுக்கும்.
* இது சத்தானது. புதுமையானது. வித்தியாசமானது. சுவையானது. வீணாக்காமல் பயன்படுத்திய திருப்தி கிடைக்கும்.
குறிப்பு: தேங்காய் சேர்க்காமலும் செய்யலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மல்ட்டி கலர் வைட்டமின் கூட்டு
» சமையல்:புரோகோலி கூட்டு
» சமையல்:பப்பாளி கூட்டு
» சமையல்:புடலங்காய் கூட்டு
» சமையல்:முருங்கைக்காய் கூட்டு
» சமையல்:புரோகோலி கூட்டு
» சமையல்:பப்பாளி கூட்டு
» சமையல்:புடலங்காய் கூட்டு
» சமையல்:முருங்கைக்காய் கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum