தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமையல்:முருங்கைக்காய் கூட்டு

Go down

சமையல்:முருங்கைக்காய் கூட்டு Empty சமையல்:முருங்கைக்காய் கூட்டு

Post  ishwarya Mon Mar 18, 2013 12:15 pm



ஆ.... ஊனா... முருங்கைக்காயை சாம்பார், புளிக்குழம்புலதான் போடுவோம்... ஆனா.. அதையே கொஞ்சம் வித்தியாசமா கூட்டாகவும் வைக்கலாம் தெரியுமா? வச்சு பாருங்க.. அதோட சுவையும் மணமும் சும்மா சுண்டியிழுக்கும் பாருங்க......

தேவையான பொருட்கள்:

சிறிது நீளமாக நறுக்கிய முருங்கைக்காய் - 2 கப்
கடலைப்பருப்பு - கால் கப்
பாசிப்பருப்பு - கால் கப்
தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
சீரகம் - கால் டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீ ஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் - ஒரு டீ ஸ்பூன்
கடுகு - கால் டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - கால் டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* குக்கரில் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

* முருங்கைக்காயை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்.

* பிறகு, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து அதில் சேர்க்கவும்.

* கடைசியாக வெந்த பருப்புகளை அதில் சேர்த்து, தாளித்து இறக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum