தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தன்னை தாக்கி காயப்படுத்திய காதலருடன் மீண்டும் இணைந்தார் ரிஹானா! (படங்கள்)

Go down

தன்னை தாக்கி காயப்படுத்திய காதலருடன் மீண்டும் இணைந்தார் ரிஹானா! (படங்கள்) Empty தன்னை தாக்கி காயப்படுத்திய காதலருடன் மீண்டும் இணைந்தார் ரிஹானா! (படங்கள்)

Post  meenu Mon Mar 18, 2013 1:07 pm



rihannaபிரபல பொப்பிசை பாடகி ரிஹானா தன்னை தாக்கி காயப்படுத்திய காதலரான கிறிஸ் பிரவுணை மன்னித்துவிட்டாராம். இதனால் சுமார் 3 ஆண்டுகளின் பின்னர் இவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர்.

25 வயதான ரிஹானா பார்படோஸை பிறப்பிடமாகக் கொண்டவர். முன்னிலை பொப்பிசைப் பாடகியான ரிஹானா, கடந்த வருடம் வெளியான பெட்டில் ஷிப் உட்பட சில படங்களிலும் நடித்துள்ளார்.

அமெரிக்கப் பாடகரான கிறிஸ் பிரவுணும் ரிஹானாவும் 2008ஆம் ஆண்டு முதல் காதலித்து ஒன்றாக வசிக்கவும் ஆரம்பித்தனர். ஆனால் 2009ஆம் ஆண்டு ரிஹானாவை கடுமையாக தாக்கி காயப்படுத்தினார் கிறிஸ் பிரவுண், இது தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி ரிஹானா ரசிகர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ள, பாடகர் கிறிஸ் பிரவுண் வில்லன் போன்று நோக்கப்பட்டார்.

அந்த சம்பவம் தொடர்பாக கிறிஸ் பிரவுண் மீது வழக்குத் தொடரப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்ட கிறிஸ் பிரவுண் 6 மாத காலம் சமூகசேவையில் ஈடுபட வேண்டுமெனவும் 5 வருடங்கள் நன்னடத்தை கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது 23 வயதான கிறிஸ் பிரவுண் இன்னும் நன்னடத்தை கண்காணிப்பில்தான் உள்ளார்.

இச்சம்பவம் கிறிஸ் பிரவுணின் இசைத் துறைவாழ்க்கையை பாதித்ததுடன், ரிஹானாவும் அவரிடமிருந்து பிரிந்து சென்றார். அதன் பின் மொடல் அழகியொருவரை கிறிஸ் பிரவுண் காதலித்தார்.

எனினும் அண்மையில் கிறிஸ் பிரவுணும் ரிஹானாவும் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். ரிஹானா தன்னை மன்னித்துவிட்டதாக செவ்வியொன்றில் கூறியுள்ளார் கிறிஸ் பிரவுண்.

“அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. அப்போது நான் மிகச் சிறியவன். அதிலிருந்து இப்போது நான் மிகவும் மாறிவிட்டேன். அச்சம்பவத்திலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டு விட்டேன்” என்கிறார் பிரவுண்.

அதேவேளை பலரும் நினைப்பது போல் கிறிஸ் பிரவுண் ஓர் அரக்கன் அல்ல என ரிஹானா நற்சான்றளித்துள்ளார். கடந்த வாரம் ரிஹானாவின் 25ஆவது பிறந்ததினத்தை கொண்டாடுவதற்காக இருவரும் ஹவாய் தீவுக்கு சென்றிருந்தனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அதிர்ச்சி மீண்ட கவர்ச்சி நடிகை: மீண்டும் பார்ட்டிகளில் கலக்கல் (படங்கள் இணைப்பு)
» மின்சாரம் தாக்கி விபத்து: நடிகை அஞ்சலி கால் வீங்கியது- படப்பிடிப்பு மீண்டும் ரத்து
» தன்னை அறிதல்
» எம்.ஜி.ஆர். படங்கள் மீண்டும் ரிலீஸ்: தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம்
» அதிர்ச்சி மீண்ட கவர்ச்சி நடிகை: மீண்டும் பார்ட்டிகளில் கலக்கல் (படங்கள் இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum