நடுவருடன் வாக்குவாதம்: மஹேலவுக்கு 10 சதவீதம் அபராதம்
Page 1 of 1
நடுவருடன் வாக்குவாதம்: மஹேலவுக்கு 10 சதவீதம் அபராதம்
இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் மஹேல ஜயவர்தனவுக்கு போட்டி ஊதியத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அடிலெய்ட் நகரில் இன்று நடைபெற்ற அவுஸ்திரேலியாவுடனான போட்டியின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்டமைக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்து.
இப்போட்டியின்போது பர்வீஸ் மஹரூவ் வீசிய பந்தொன்று துடுப்பாட்ட வீரரின்இடுப்புக்கு மேல் உயர்ந்தால் நடுவர் புரூஸ் ஒக்ஸன்போர்ட், அப்பந்தை நோபோலாக அறிவித்தார். இதனால் நடுவருடன் மஹேல ஜயவர்தன வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் மஹேலவின் நடவடிக்கையான ஒழுங்குவிதிகளின் 2.1.3 ஆவது பிரிவை மீறுவதாகும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் தெரிவித்துள்ளது.
இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இப்போட்டியின் பின்னர் ஐ.சி.சி. சிறப்பு மத்தியஸ்தர் குழாமைச் சேர்ந்த கிறிஸ் புரோட்டினால் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மஹேல ஜயவர்தன ஏற்றுக்கொண்டதாகவும் அதனால் சம்பிரதாய விசாரணைகள் தேவைப்படவில்லை எனவும் ஊடக அறிக்கையொன்றில் ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
‘எந்தவொரு சூழ்;நிலையிலும் நடுவரின் தீர்ப்பை மதிப்பதுடன் ஏற்றுக்கொள்ளவும் வேண்டுமென ஐ.சி.சி. ஒழுங்குவிதிகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதால் மஹேல ஜயவர்தனவின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது’ என கிறிஸ்புரோட் தெரிவித்துள்ளார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இந்திய கிரிக்கெட் வீரர் வீரட் கோலிக்கு போட்டி ஊதியத்தின் 50 சதவீதம் அபராதம்
» வாக்குவாதம் வேண்டாமே!
» வாக்குவாதம் வாழ்க்கைக்கு ஆகாது!
» ராமன்–சீதாபிராட்டி வாக்குவாதம்
» ஹர்பஜன் சிங்குக்கு மீண்டும் அபராதம்
» வாக்குவாதம் வேண்டாமே!
» வாக்குவாதம் வாழ்க்கைக்கு ஆகாது!
» ராமன்–சீதாபிராட்டி வாக்குவாதம்
» ஹர்பஜன் சிங்குக்கு மீண்டும் அபராதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum