இலங்கை கிரிக்கெட் அணி உட்பூசல்களால் பல அணிகளாக பிரிந்துள்ளது: விளையாட்டுத்துறை அமைச்சர்
Page 1 of 1
இலங்கை கிரிக்கெட் அணி உட்பூசல்களால் பல அணிகளாக பிரிந்துள்ளது: விளையாட்டுத்துறை அமைச்சர்
இலங்கை கிரிக்கெட் அணி உட்பூசல்களால் பல அணிகளாக பிரிந்துள்ளதாக கூறிய விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, அண்மைக் காலத்தில் அணியின் விளையாட்டுத் தரம் குறைவடைந்துள்ளதையும் வன்மையாக கண்டித்துள்ளார்.
இலங்கை அணி நாடு திரும்பிய பின், விளையாட்டு வீரர்களுடன் தென்னாபிரிக்காவிலிருந்து வெளிப்படையாக சில விடயங்களை பேசவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறினார். தென்னாபிரிக்காவுடன் டெஸ்ட் போட்டியில் 2 – 1 என்ற விகிதத்தில் தோல்வியை தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி நெருக்கடியில் உள்ளது. அணியினர்களுக்கிடையே களத்துக்கு வெளியில் நல்ல உறவு இல்லை. இது விளையாட்டின் தரத்தைப் பாதிக்கின்றதென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
‘அணி இலங்கை திரும்பியதும் நான் அவர்களை சந்திக்கவுள்ளேன். அணியில் அதிக உள் அரசியல் உள்ளதென கருதுகின்றேன். இது கிரிக்கெட் களத்திலும் தெரிகிறது’ என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முத்தையா முரளிதரன் 2010இல் இளைப்பாறிய பின் இலங்கை ஒரேயொரு டெஸ்ட் போட்டியில்தான் வெற்றி கண்டது.
விளையாட்டில் தலையிடுவதாக இலங்கை அரசாங்கத்தின் மீது குறை கூறப்படுகிறது. அண்மையில் கிரிக்கெட் சபைக்கான போட்டியில்லாத தெரிவுகளிலும் தலையீடுகள் இருந்ததாக கூறப்படுகின்றது.
இதேவேளை, ‘நல்ல கிரிக்கெட் வீரர்களை கண்டுபிடிக்க முடியாதுள்ளது. எமது உள்நாட்டு அமைப்பு திருத்தப்பட வேண்டும். கழகங்களில் விளையாடுவதற்கும் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதற்குமிடையில் பாரிய வேறுபாடு உண்டு’ என இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் திலகரட்ன டில்ஷான் கூறினார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கிரிக்கெட்: இந்தியா, இலங்கை வெற்றி
» மகளிர் கிரிக்கெட் : வென்றது இலங்கை, வெளியேறியது இந்தியா
» இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் வெற்றி பெறுமா?
» இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்: மஹேல ஜயவர்தன
» கிரிக்கெட்: இருபது ஓவர் ஆட்டத்தில் ஆஸியை வீழ்த்தியது இலங்கை
» மகளிர் கிரிக்கெட் : வென்றது இலங்கை, வெளியேறியது இந்தியா
» இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் வெற்றி பெறுமா?
» இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்: மஹேல ஜயவர்தன
» கிரிக்கெட்: இருபது ஓவர் ஆட்டத்தில் ஆஸியை வீழ்த்தியது இலங்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum