சமையல்:கத்திரிக்காய் ஃப்ரை
Page 1 of 1
சமையல்:கத்திரிக்காய் ஃப்ரை
எனக்கு கத்திரிக்காயே பிடிக்காதுனு சொல்றவங்க நிறைய பேர் இருக்காங்க.... அப்படிபட்டவங்களுக்கு இந்த மாதிரி வித்தியாசமா கத்திரிக்காய் ஃப்ரை செஞ்சு கொடுத்தா.. உடனே கத்திரிக்காய் ஃபேவரைட் ஆகிடுவாங்க பாருங்க.....
தேவையான பொருட்கள்:
பெரிய கத்திரிக்காய் - 1
சிக்கன் 65 மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீ ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* கத்திரிக்காயை சிறிது தடிமனாக வட்டமாக நறுக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் சிக்கன் மசாலா, எலுமிச்சை சாறு, உப்பு, இஞ்சி-பூண்டு விழுது, எண்ணெய் 2 டீ ஸ்பூன் என அனைத்தையும் ஒன்றாக கலந்து கத்திரிக்காயில் தடவி 10 நிமிடம் வைக்கவும்.
* நான் ஸ்டிக் கடாயில் சிறுதீயில் இரண்டு புறமும் வேகவைத்து எடுக்கவும். ஏற்கனவே எண்ணெய் சேர்த்து பிசைந்திருப்பதால் தேவையானால் மட்டும் எண்ணெய் விட்டு வேகவைக்கவும்.
* சாம்பார், தயிர், ரசம் சாதமுடன் சாப்பிட மிகவும் நன்றாகயிருக்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கத்திரிக்காய் ஃப்ரை
» சமையல்:குடமிளகாய் பனீர் ஃப்ரை
» சமையல்:கத்திரிக்காய் பிரியாணி
» வெண்டைக்காய் ஃப்ரை
» கிரீன் ஃப்ரை
» சமையல்:குடமிளகாய் பனீர் ஃப்ரை
» சமையல்:கத்திரிக்காய் பிரியாணி
» வெண்டைக்காய் ஃப்ரை
» கிரீன் ஃப்ரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum