ஒருநாள் போட்டி வரலாற்றில் இலங்கை படுபயங்கர தோல்வி: 43 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களும் இழப்பு
Page 1 of 1
ஒருநாள் போட்டி வரலாற்றில் இலங்கை படுபயங்கர தோல்வி: 43 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களும் இழப்பு
ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இலங்கை அணி தனது முதலாவது படுமோசமான தோல்வியை தலைவர் திலகரட்ண தில்ஷான் தலைமையில் நேற்று (11) பதிவு செய்துள்ளது.
தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் 43 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்ததன் மூலம் இலங்கை அணி இந்த அவமானத் தோல்வியை தனதாக்கிக் கொண்டுள்ளது.
பொலன் பார்க் பேர்ல் மைதானத்தில் இடம்பெற்ற நேற்றைய போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 301 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் ஹசிம் அம்லா 112 ஓட்டங்களையும் கலிஸ் 72 ஓட்டங்களையும் அணித் தலைவர் எபிடி வில்லியஸ் 52 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் அசத்திய லசித் மலிங்க 5 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு 302 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஒரு நாள் போட்டி வரலாற்றில் தனது மிக மோசமான துடுப்பாட்டத் திறனை வெளிப்படுத்தி 20.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 43 ஓட்டங்களை மாத்திரமே பெற்று அவமான படுதோல்வியை சந்தித்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் நுவன் குலசேகர மாத்திரமே இரட்டை இலக்க ஓட்ட எண்ணிக்கையை (19) பெற்றார்.
இலங்கை அணித் தலைவர் தில்ஷான் உள்ளிட்ட நால்வர் எதுவித ஓட்டங்களையும் பெறாது ஆட்டமிழந்ததோடு ஆறு வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் மோனே மோர்க்கல் 4 விக்கெட்களையும் LL Tsotsobe 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக மோனே மோர்க்கல் தெரிவு செய்யப்பட்டதோடு, 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் தென்னாபிரிக்கா முன்னிலை வகிக்கிறது.
மேலும் 258 என்ற பிரமாண்டமான ஓட்ட எண்ணிக்கையில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா, அதிகூடிய ஓட்டங்களில் ஒருநாள் போட்டியை வெற்றிகொண்ட அணிகள் பட்டியலில் மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இலங்கை ஒருநாள் போட்டி! ரசிகர்களுக்கு இலவச டிக்கெட்!
» இலங்கை–வங்காளதேசம் மோதிய 2–வது ஒருநாள் போட்டி மழையால் ரத்து
» இலங்கை–வங்காளதேசம் மோதிய 2–வது ஒருநாள் போட்டி மழையால் ரத்து
» இந்துக்களின் போர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொக்குவில் இந்து வெற்றி
» மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை: இன்றாவது வெற்றி பெறுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum