தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமையல்:பேரீச்சை சட்னி

Go down

சமையல்:பேரீச்சை சட்னி Empty சமையல்:பேரீச்சை சட்னி

Post  ishwarya Mon Mar 18, 2013 11:57 am



அதே சட்னியா.. இத விட்டா வேற இல்லயா... என்று அலுத்துக்கொள்ளுகிறவர்கள் இந்த பேரீச்சை சட்னியை ட்ரை பண்ணிப் பாருங்க... வித்தியாசமாக அதேநேரத்தில் ரொம்ப சுவையாகவும் இருக்கும்....

தேவையான பொருட்கள்:

பேரீச்சை - கொட்டை நீக்கியது 5-6
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
துருவிய வெல்லம் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி - 1 டீ ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - 2 டீ ஸ்பூன்

செய்முறை:

* புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

* பேரீச்சையை நன்றாக மிக்சியில் அரைத்துக் கொள்ளுங்கள். இதையும் சக்கை இல்லாமல் வடிகட்டிக் கொள்ளுங்கள்.

* அடிகனமான வாணலியில் வெல்லத்தை கரைத்து கொண்டு மணல் இல்லாமல் வடிகட்டி வையுங்கள்.

* வாணலியை அலம்பி விட்டு, மீண்டும் அடுப்பில் வைத்து புளித்தண்­ணீரை விட்டு கொதிக்க ஆரம்பித்ததும், பேரிச்சை விழுதை விட்டு, வெல்லக் கரைசலையும் விடுங்கள்.

* கொஞ்சம் கெட்டிப் பட ஆரம்பித்ததும், இதில் மிளகாய்ப் பொடி, பெருங்காயம், உப்பு சேர்த்து கலந்து வையுங்கள்.

* இதை பிரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

* வடஇந்திய உணவுகளுக்கு dressing ஆகவும், சமோசா போன்றவற்றிருக்கு sauce மாதிரியும் தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum