ஒலிம்பிக்கில் 22 பதக்கங்கள் வென்ற பெல்ப்ஸின் சாதனை விபரங்கள்! நீச்சலுக்கும் ‘குட்பை’ சொல்கிறார்!
Page 1 of 1
ஒலிம்பிக்கில் 22 பதக்கங்கள் வென்ற பெல்ப்ஸின் சாதனை விபரங்கள்! நீச்சலுக்கும் ‘குட்பை’ சொல்கிறார்!
0
லண்டனில் நடந்து வரும் ஒலிம்பிக்கில் நீச்சல் பந்தயத்தில் அமெரிக்காவின் வீறுநடையை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. நேற்று முன்தினம் இரவுடன் நீச்சல் போட்டி நிறைவடைந்தது.
கடைசி நாளில் ஆண்களுக்கான 4×100 மீட்டர் மெட்லே தனிநபர் தொடர் நீச்சலில் வழக்கம் போல் அமெரிக்காவின் ஆதிக்கமே எதிரொலித்தது. மைக்கேல் பெல்ப்ஸ், பிரன்டன் ஹான்சென், மேத்யூ கிரிவெர்ஸ், நாதன் அட்ரியன் ஆகியோர் கொண்ட அமெரிக்க குழு இலக்கை 3 நிமிடம் 29.35 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றது.
இதுதான் தனது கடைசி ஒலிம்பிக் என்று ஏற்கனவே அறிவித்திருந்த மைக்கேல் பெல்ப்ஸ் தங்கப்பதக்க அறுவடையுடன் தனது ஒலிம்பிக் வாழ்க்கையை நிறைவு செய்தார்.
பெல்ப்ஸ் இந்த ஒலிம்பிக்கில் 7 பிரிவுகளில் பங்கேற்றார். இதில் 4 தங்கப்பதக்கமும், 2 வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினார். 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் தனது 15 வயதில் காலடி எடுத்து வைத்த பெல்ப்ஸ் அந்த ஒலிம்பிக்கில் 200 மீட்டர் பட்டர்பிளை பந்தயத்தில் 5-வது இடம் மட்டும் பிடித்தார். பதக்கம் ஏதும் வெல்லவில்லை. இதன் பின்னர் 2004-ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 6 தங்கம், 2 வெண்கலமும், 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் 8 தங்கமும் வென்று நீச்சல் உலகின் மன்னனாக பிரபலமானார்.
27 வயதான பெல்ப்ஸ் ஒலிம்பிக்கில் இதுவரை 18 தங்கம் உள்பட 22 பதக்கங்கள் அள்ளி குவித்திருக்கிறார். ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கங்கள் வென்ற சரித்திர நாயகன் இவர் தான். இவருக்கு அடுத்தபடியாக சோவியத் யூனியனின் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை லாரிசா லாத்னினா 18 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறார்.
இந்த ஒலிம்பிக்குடன் நீச்சலில் இருந்து ஓய்வு பெறுவதாக பெல்ப்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார். அடுத்த ஒலிம்பிக்கில் பங்கேற்பதில்லை என்ற முடிவு எடுத்தது குறித்து பெல்ப்ஸ் நிருபர்களிடம் பேசினார்.
அப்போது, எனது 30 வயதுக்கு பிறகு நீச்சலடிக்க விரும்பவில்லை. அதற்கு இன்னும் 3 ஆண்டுகள் இருக்கிறது. இந்த 3 ஆண்டுகளிலும் நீச்சலில் பங்கேற்க விரும்பவில்லை. 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்குக்கு முன்பாகவே நான் 30 வயதை கடந்து விடுவேன். நான் என்ன சாதிக்க வேண்டும் என்று விரும்பினேனோ அதை செய்து விட்டேன். எனது நீண்ட இந்த பயணம் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. எல்லாம் முடிந்து விட்டது. இப்போது உணர்ச்சிவயப்பட்டு உள்ளேன். நீச்சலுக்கு நான் `குட்பை’ சொல்ல வேண்டிய நேரம் என்று கண்ணீர் மல்க கூறினார்.
ஒலிம்பிக்கில் கடைசி நீச்சல் பந்தயத்தில் வெற்றி பெற்றதும் அவர் தனது பயிற்சியாளர் பாப் பவ்மேனை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார். அப்போது பாப் பவ்மேன், நான் உன்னை நேசிக்கிறேன், நாம் சாதித்து விட்டோம் என்று உணர்ச்சி பெருக கூறினார். பெல்ப்சின் சாதனையின் பாப் பவ்மேனின் பங்கு மகத்தானது. அவர் கடந்த 16 ஆண்டுகளாக பெல்ப்சுக்கு பயிற்சி அளித்துள்ளார்.
36 உலக சாதனைகளையும், 16 ஒலிம்பிக் சாதனைகளையும் முறியடித்துள்ள பெல்ப்ஸ் 26 உலக சாம்பியன்ஷிப் பட்டங்களையும் வென்றிருக்கிறார். `ஒட்டுமொத்த ஒலிம்பிக்கின் தலைச்சிறந்த வீரர்’ என்று பாராட்டியுள்ள சர்வதேச நீச்சல் சம்மேளனம் விருது வழங்கி அவரை கவுரவித்துள்ளது.
6 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட பெல்ப்ஸ் நீச்சல் மூலம் ரூ.557 கோடி சம்பாதித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கரும்புள்ளிகளுக்கு 'குட்பை'!
» 8 ஆயிரம் கிலோவில் லண்டன் ஒலிம்பிக் பதக்கங்கள்!
» எந்திரன் – சாதனை மேல் சாதனை
» ஒலிம்பிக்கில் ரஹ்மான் இசை
» ஒலிம்பிக்கில் ரஹ்மான் இசை
» 8 ஆயிரம் கிலோவில் லண்டன் ஒலிம்பிக் பதக்கங்கள்!
» எந்திரன் – சாதனை மேல் சாதனை
» ஒலிம்பிக்கில் ரஹ்மான் இசை
» ஒலிம்பிக்கில் ரஹ்மான் இசை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum