கிரிக்கெட் உலகில் ஜுனியர் சச்சினின் ஆட்டம் ஆரம்பம்! Pics
Page 1 of 1
கிரிக்கெட் உலகில் ஜுனியர் சச்சினின் ஆட்டம் ஆரம்பம்! Pics
64
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன், 14 வயதுக்குட்பட்டோருக்கான மும்பை அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அர்ஜுனின் ஆட்டத்தை வரும் 20ம் திகதி, அகமதாபாத் மைதானத்தில் காணலாம்.
கடந்த வருடம் யூன் மாதமே மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும் போட்டிகள் நடைபெற்றன.
இதில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் கலந்துகொண்டார்.
12 வயதே ஆன அர்ஜுன், இந்த போட்டியில் ஒரு சிக்சர், 14 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 124 ஓட்டங்கள் எடுத்து தனது அணி இறுதிப்போட்டிக்குள் நுழைய உதவினார்.
இந்த சிறப்பான ஆட்டமே இவரை 14 வயதுக்குட்பட்டோருக்கான வீரர்கள் தகுதிப் பட்டியலில் இடம் பிடிக்க செய்துள்ளது.
முன்னதாக இவர் புனேயில், நடைபெற்ற கேடன்ஸ் கிண்ணத்திற்கான விளையாட்டுப்போட்டியில் அறிமுகமான முதல் ஆட்டத்தில் அர்ஜுன் 39 பந்துகளில் 65 ஓட்டங்கள் எடுத்தார்.
இடது கையில் பந்து வீசும் பழக்கமுள்ள அர்ஜுன், அடுத்து 2011ல் நடைபெற்ற மற்றொரு போட்டியில் சிறப்பாக பந்து வீசி 22 ஓட்டங்கள் கொடுத்து 8 விக்கெட்டுகள் எடுத்ததிருந்தார்.
அர்ஜூன் தனது அப்பா சச்சினுடன் பலமுறை இந்திய அணியின் பயிற்சி முகாம்களில் தலை காட்டி இருக்கிறார்.
அத்துடன் நம் இந்திய வீரர்களுடனும் அவர் பயிற்சிகளில் பங்கேற்பதுண்டு.
அர்ஜுனின் ஆர்வத்தையும், ஆட்டத்தையும் சச்சின் தன் செல்போனில் படம் பிடித்து அதை பின் அவருக்கு காண்பித்து தவறுகளைத் திருத்திக் கொள்ள உதவுவாராம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பிரவீன்காந்தின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்
» சச்சினின் 100 வது சதம்: தாகம் தீர்ந்து சாந்தியான ரசிகர்கள்
» சிம்புவின் வாலு – இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்
» சச்சினின் 100 வது சதம்: தாகம் தீர்ந்து சாந்தியான ரசிகர்கள்
» கடவுளால் மட்டுமே சச்சினின் சாதனையை முறியடிக்க முடியும்: வீரேந்திர ஷேவாக்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum