காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் ஷரபோவா!
Page 1 of 1

sharapova
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி, ஆண்கள் பிரிவில் செக் வீரர் பெர்டிச், பெண்கள் பிரிவில் ரஷ்யாவின் ஷரபோவாவும் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த 4வது சுற்று போட்டியில், செக் வீரர் தாமஸ் பெர்டிச், தென்னாபிரிக்க வீரர் கெவின் ஆன்டர்சன்னுடன் மோதினார்.
இதில் அபாரமாக ஆடிய பெர்டிச், 6,3, 6,2, 7,6 என்ற செட் கணக்கில் கெவினை தோற்கடித்து எளிதாக காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார்.
செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச், சுவிட்சர்லாந்து வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா ஆகியோரிடையே நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் வீரருடன், பெர்டிச் காலிறுதியில் மோதுவார்.
மற்றொரு நான்காவது சுற்று போட்டியில், ஸ்பெயின் வீரர் டேவிட் பெரர், ஜப்பான் வீரர் கெய் நிஷிகோரியை 6,2, 6,1, 6,4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
ஸ்பெயின் வீரர் நிகோலஸ் அலமேக்ரோ , செர்பிய வீரர் ஜன்கோ திப்சரோவிச் இடையிலான போட்டியில், நிக்கோலஸ் 6,2, 5,1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலையில் இருந்தபோது, திப்சரோவிச் எதிர்பாராதவிதமாக காயம் அடைந்து போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து நிக்கோலஸ் காலிறுதிக்கு முன்னேறினார். இவருடன் காலிறுதியில் டேவிட் பெரர் மோதுவார்.
பெண்கள் ஒற்றையர் 4வது சுற்று ஆட்டத்தில், சீனாவின் நா லீ, ஜெர்மனி வீராங்கனை ஜூலியா கோர்ஜ்ஜசை 7,6, 6,1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில், செர்பிய வீராங்கனை அனா இவானோவிக் 2,6, 4,6 என்ற செட் கணக்கில் போலாந்து வீராங்கனை அக்னிஸ்கா ரத்வன்ஸ்காவிடம் தோற்றார். காலிறுதியில் ரத்வன்ஸ்கா , நா லீ மோதுகின்றனர்.
ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா 6,1, 6,0 என்ற செட் கணக்கில், பெல்ஜியம் வீராங்கனை கிர்ஸ்டென் பிலிப்கென்சை வீழ்த்தினார். இதேபோல் ரஷ்ய வீராங்கனை இகடெரினா மகரோவா 7,5, 6,4 என்ற செட் கணக்கில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்செலிகியூ கெர்பரை தோற்கடித்தார்.
இதையடுத்து ஷரபோவாவுடன், இகடெரினா மகரோவா காலிறுதியில் விளையாடுகிறார்.
பெண்கள் இரட்டையர் போட்டியில், அமெரிக்க சகோதரிகள் வீனஸ், செரீனா வெற்றி பெற்று காலிறுதியில் நுழைந்துள்ளனர்.
இவர்கள் காலிறுதிப் போட்டியில், இத்தாலி வீராங்கனைகள் சாரா இரானி, ரோபெர்டா வின்சியுடன் மோதுகின்றனர். மற்றொரு பெண்கள் காலிறுதி போட்டிக்கு, ரஷ்யாவின் இகடெரினா மகரோவா, எலினா வெஸ்னினா ஜோடியும், ஸ்பெயின் வீராங்கனைகள் சில்வியா சோலெர் எஸ்பினோசா, கர்லா சுவாரெஜ் நவர்ரோ ஜோடியும் தகுதி பெற்றுள்ளன.
ஆண்கள் இரட்டையர் காலிறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் மார்க் பிரையன், பாப் பிரையன் இணையும், இத்தாலியின் டேனியல் பிராக்சியாலி, செக் குடியரசின் லுகாஸ் லோஹி ஜோடியும் தகுதி பெற்றுள்ளன.
இதேபோல், பிரேசில் வீரர் தாமஸ் பெலுசி, பிரான்ஸ் வீரர் பெனாய்ட் பாய்ரே இணையும், ஸ்பெயின் வீரர்கள் மார்செல் கிரானோல்லர்ஸ், மார்க் லோபெஸ் இணை காலிறுதியில் மோத உள்ளன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எதிராளிக்கு இடம்தராமல் வெற்றி: மரியா ஷரபோவா சாதனை
» பஞ்சாப் அணியை வென்று 'பிளே ஆப்' சுற்றுக்கு சென்னை அணி தகுதிப்பெற்றது
» ஹாக்கி உலக லீக்: இந்திய ஆடவர், மகளிர் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum