ஹாக்கி உலக லீக்: இந்திய ஆடவர், மகளிர் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி
Page 1 of 1

இந்தியாவில் நடந்துவருகின்ற ஹீரோ ஹாக்கி உலக லீக்கின் இரண்டாம் சுற்று ஆட்டங்களில் வென்று இந்திய அணி மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
நேற்று ஞாயிறன்று தில்லியில் நடந்த இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் வங்கதேச அணியை 5-1 என்ற கோல் கணக்கில் இந்தியா எளிதாக வீழ்த்தியது.
தொடர்புடைய விடயங்கள்
விளையாட்டு
இந்தப் பந்தயத்தில் இதுவரை ஐந்து ஆட்டங்களை விளையாடியுள்ள இந்திய அணி ஒன்றைக் கூட தோற்காமல் பட்டியலில் 15 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.
12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் வந்துள்ள அயர்லாந்து அணியும் மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் வங்கதேச அணியினர் முதல் கோலைப் போட்டிருந்தாலும், அதன் பின்னர் இந்திய அணியினர் மிகச் சிறப்பாக ஆடி கோல் மழை பொழிந்தனர்.
இந்தியாவுக்காக டேனிஷ் முஜ்தபா முதல் கோலை போட்டு எண்ணிக்கையை சமன் செய்தார்.
அதன் பின்னர் ருபிந்தர் பால் சிங், ஆகாஷ் தீப் சிங், மலக் சிங் ஆகியோர் கோல்களை அடித்திருந்தனர்.
இந்த ஆட்டத்தில் டேனிஷ் முஜ்தபா இரண்டாவது கோல் ஒன்றையும் அடித்திருந்தார்.
இந்தப் பந்தயத்தின் சிறந்த வீரராகவும் இந்தியாவின் அணித் தலைவர் சர்தார் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பந்தயத்தில் அதிகபட்சமாக 8 கோல்களை அடித்த இந்தியாவின் ரகுநாத்தும் ஐயர்லாந்தின் ஆலன் சொதர்னும் அதிக கோல் போட்டவருக்கான விருதைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்திய மகளிர் அணி
ஹீரோ ஹாக்கி உலக லீக் இரண்டாம் சுற்று ஆட்டங்களில் இந்திய மகளிர் அணியும் மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
ரஷ்ய மகளிர் அணியை எதிர்த்து நேற்று ஞாயிறன்று விளையாடிய இந்திய மகளிர் 1-0 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை வென்றனர்.
அனுபா பார்லா அடித்த பந்தை திசை திருப்பி கோல் வலைக்குள் தள்ளினார் ராணி ராம்பால்.
இரண்டாம் சுற்று பந்தயத்தில் புள்ளிகள் பட்டியலில் இந்திய மகளிர் ஹாக்கி அணி முதலிடத்தில் வந்துள்ளது.
இந்த அணியும், பட்டியலில் இரண்டாம் இடத்தில் வந்த ஜப்பான் மகளிர் அணியும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்திய மகளிர் அணியைச் சேர்ந்த ஜஸ்பிரீத் கோருக்கு சிறந்த தற்காப்பு ஆட்டக்காரருக்கான விருது வழங்கப்பட்டது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஹாக்கி இந்தியா லீக் போட்டி தொகுப்பாளராக மந்திரா பேடி
» மானத்தை வாங்கிய இந்திய ஹாக்கி அணி!
» இந்திய ஹாக்கி அணிக்கு கடைசி இடம்
» இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கும் தகுதி எனக்கு மட்டுமே – டோனி
» உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்! புதிய சாதனை படைத்த இந்திய மகளிர் அணி! (படங்கள்)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum