உலகளவில் 680 போட்டி, 425 வீரர்கள் ஈடுபட்ட மிகப்பெரிய சூதாட்டம் – திடுக்கிடும் தகவல்கள்!
Page 1 of 1

உலகம் முழுவதும் நடைபெற்ற 680 கால்பந்து போட்டிகளில் சூதாட்டம் நடைபெற்றுள்ளதாக யூரோபோல் அமைப்பு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 425 வீரர்கள், அதிகாரிகள், நடுவர்கள் என்று அனைவரும் இதில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக ஆசியாவின் ஒழுங்கமைக்கப்பட்ட கிரைம் கும்பலால் இந்த சூதாட்டம் நடத்தப்பட்டுள்ளது. போட்டி முடிவுகளையே பேரம் பேசி, சூதாட்ட முறையில் மாற்றியமைத்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய கால்பந்து லீக் ஆன சாம்பியன்ஸ் லீக்கின் இரண்டு போட்டிகளில் கடும் சூதாட்டம் நடந்துள்ளதாகவும் ஆட்டத்தின் போக்கை மற்றி முடிவுகளையும் இது மாற்றியுள்ளதாகவும் யூரோபோல் தெரிவித்துள்ளது.
ஆசியாவில் உள்ள கும்பல் ஒன்று ஐரோப்பாவில் உள்ள கிரிமினல் நெட்வொர்க்குடன் இணைந்து இத்தகைய சூதாட்டங்களை நடத்தி மக்களை ஏமாற்றியுள்ளது.
ஹாலந்தில் நடைபெற்ற பரபரப்பான செய்தியாளர்கள் சந்திப்பில் யூரோபோல் இயக்குனர் ராப் வெய்ன்ரைட் கூறுகையில், மிகப்பெரிய சூதாட்ட வலைப்பின்னல் குறித்த மிகப்பெரிய உலகளாவிய விசாரணையாகும் இது. இதன் முடிவுகள் கால்பந்தாட்டத்திற்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
நாங்கள் விரிவான கிரிமினல் நெட்வொர்க் பின்னணியில் இருப்பதை கண்டு பிடித்துள்ளோம். இதன் மூலம் கிரிமினல்கள் 16 மில்லியன் யூரோக்கள் லாபம் சம்பாதித்துள்ளதாக தெரிகிறது.
சூதாட்டத்தில் ஈடுபட்டோருக்கு 2 மில்லியன் யூரோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு தனி நபருக்கு அதிகபட்சமாக 1,40,000 யூரோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆசியாவில் உள்ள மிகப்பெரிய சூதாட்ட கும்பல், ஐரோப்பாவில் உள்ள கிரிமினல் நெட்வொர்க்குடன் இணைந்து 15 வேறுபட்ட நாடுகளில் சூதாட்டத்தை திறம்பட நிகழ்த்தியுள்ளது.
போட்டி ஒன்றுக்கு ஒரு லட்சம் யூரோக்கள் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளதற்கான சாட்சியங்கள் இருப்பதாக காவல்துறையும் கூறுகிறது.
உலகக் கிண்ண தகுதி சுற்றுப்போட்டிகளில் ஆப்ரிக்காவில் நடந்த போட்டிகளில் 2, மற்றும் மத்திய அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு போட்டியில் சூதாட்டம் நிகழ்ந்துள்ளது.
இது வரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தச் செய்தியே பனி மலையின் வெறும் முகடு மட்டுமே என்று தெரிகிறது.
ஐரோப்பிய கால்பந்துக்கு இன்றைய தினம் சோகமான தினம் என்றே பார்க்கப்படுகிறது.
யுஏபா கால்பந்து அமைப்பின் தலைவர் முன்னாள் பிரான்ஸ் வீரர் மைக்கேல் பிளாட்டினியின் கவனத்திற்கு இந்த படு பயங்கரமான சூதாட்ட விவகாரம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதனை வென்றெடுத்து மீண்டும் கால்பந்தாட்டத்தை சுத்தம் செய்வது கடினம் என்றே பலரும் கருதுகின்றனர்.
ஐரோப்பிய கால்பந்து ரசிகர்கள் மத்தியில் இது பெரும் கோபத்தை கிளப்பியுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஸ்பாட் பிக்சிங் எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள் சஸ்பெண்ட்!
» உலகளவில் உணவுப் பொருட்கள் பெருமளவு விரயம்"
» கால்பந்து சூதாட்ட சூத்திரதாரியாக ஒரு தமிழர் – திடுக்கிடும் பின்னணி
» பாஸ்டன் குண்டுவெடிப்பு சந்தேக நபர்களின் திடுக்கிடும் திட்டங்கள்!
» சூதாட்டம் துள்ளி விளையாடும் IPL

Permissions in this forum:
You cannot reply to topics in this forum