உலகளவில் உணவுப் பொருட்கள் பெருமளவு விரயம்"
Page 1 of 1

உலக அளவில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களில், பாதியளவுக்கு விரயமாகிறது என்று பிரிட்டனைத் தலைமையகமாகக் கொண்டுள்ள ஒரு பொறியியல் அமைப்பு கூறியுள்ளது.
வறிய நாடுகளில் உணவுப் பொருட்களின் உற்பத்திகள் திறம்பட இல்லாததும், செல்வந்த நாடுகளில் இருக்கும் நுகர்வோர்கள் அதீதமான அளவில் பொருட்கள் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பதுமே இதற்கு முக்கிய காரணங்கள் என்று பிரிட்டனிலுள்ள இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் மெக்கானிக்கல் இஞ்ஜினியர்ஸ் எனும் அமைப்பு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
இப்படியாக உணவு தானியங்கள் விரயமாவதை மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் சரிசெய்ய இயலும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
உலகளவில் படிப்படியாக விவசாய நிலங்களும் நீராதரங்களும் குறைந்து வரும் நிலையில் உணவு தானிய விரயம் என்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
"துர்பாக்கியம் தொடரக் கூடாது"
வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு உணவை வழங்கு தேவைப்படும் இயற்கை வளங்கள் பூமியில் குறைவாகவே உள்ளன. மேலும் இந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இன்னும் கூடுதலாக முன்னூறு கோடி பேருக்கு உணவளிக்க வேண்டிய நிலையும் ஏற்படும்.
தேவைக்கு அதிகமாக வாங்கும் பழக்கமும் பிரச்சினைக்கு ஒரு காரணம் என்று அறிக்கை
எனவே உணவை விரயம் செய்யும் துர்பாக்கியம் இனியும் தொடரக் கூடாது எனவும் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு கூறியுள்ளது.
செல்வந்த நாடுகளில் கடைகளில் காய் கனிகள் வாங்கும் போது அவை பார்ப்பதற்கு சீராகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்கிற மனோபாவமும் கூடுதலாக இறைச்சி சாப்பிடும் பழக்கமும் கூட இதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதாக எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இறைச்சியை உற்பத்தி செய்து சந்தைக்கு கொண்டுவருவதற்கு கூடுதலான வளங்கள் தேவைப்படுகின்றன எனவும் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் மெக்கானிக்கல் இஞ்ஜினியர்ஸ் கூறுகிறது.
உலகம் முழுவதும் இருக்கக் கூடிய நில மற்றும் நீர் வளங்களை மேலும் திறம்பட எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் சில பரிந்துரைகளை அந்த அமைப்பு செய்துள்ளது.
சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் கூடுதலான நிலங்களை விவசாயத்துக்கு பயன்படுத்துவதும் சிரமமான விஷயம் என்பதால் விவசாயத்துறையில் உற்பத்தித்திறனை அதிகரிப்பது மிகவும் முக்கியமானது என அந்த அறிக்கை கூறுகிறது.
சொட்டுநீர்ப் பாசனமே சிறந்தது
சொட்டுநீர்ப் பாசனமே இன்றையத் தேவை எனக் கருத்து.
விவசாயத்துக்கான நீர் வளங்களை நிர்வகிப்பது இதில் முக்கிய பங்கு வகிக்கிறது எனக் கூறும் அந்த அமைப்பு, நீராதாரங்களின் மேலாண்மையும் மோசமாக இருப்பதாகவும் எனவும் தெரிவிக்கிறது.
தவறான இடங்களில் ஆழ் குழாய் கிணறுகளை அரசுகளும் தனியாரும் தோண்டுவது இதற்கு ஒரு உதாரணம் எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெருமளவில் நீர் ஆவியாகும் வகையில் விவசாயம் செய்வது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும் எனவும், சொட்டு நீர் பாசனத்தை நிறுவுவதற்கு செலவு கூடுதல் என்றாலும் அதன் மூலம் மூன்று மடங்கு கூடுதலான பலனைப் பெறலாம் எனவும் பிரிட்டனிலுள்ள இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் மெக்கானிக்கல் இஞ்ஜினியர்ஸ் தனது அறிக்கையில் கோடிட்டு காட்டியுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உணவுப் பொருட்கள்!
» உணவில் தவிர்க்க கூடாத பத்து உணவுப் பொருட்கள்:--
» உலகளவில் 680 போட்டி, 425 வீரர்கள் ஈடுபட்ட மிகப்பெரிய சூதாட்டம் – திடுக்கிடும் தகவல்கள்!
» ஒய்திஸ் கொலை வெறி பாடல் ஹிட்; பிராந்திய மொழிப்படங்களுக்கு உலகளவில் வரவேற்பு: கோவா பட விழாவில் சூர்யா பேச்சு
» உணவுப் பண்பாடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum