தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுடப்பட்ட காதலியை காப்பாற்ற முயன்றாரா பிஸ்டோரியஸ்? Pics

Go down

சுடப்பட்ட காதலியை காப்பாற்ற முயன்றாரா பிஸ்டோரியஸ்? Pics Empty சுடப்பட்ட காதலியை காப்பாற்ற முயன்றாரா பிஸ்டோரியஸ்? Pics

Post  meenu Sun Mar 17, 2013 12:45 pm



28


சுடப்பட்ட காதலியை கடைசி நேரத்தில் காப்பாற்றும் முயற்சியில் பிஸ்டோரியஸ் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தென் ஆப்ரிக்க மாற்றுத்திறனாளி தடகள வீரரான ஒஸ்கார் பிஸ்டோரியஸ் செயற்கை கால்கள் பொருத்தப்பட்டு பாராலிம்பிக் போட்டிகளில் 6 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என்று 8 பதக்கங்கள் வென்றுள்ளார்.

இவர், காதலர் தினத்தன்று காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் திட்டமிட்டுத் தான் கொன்றார் என்று அருகில் வசிக்கும் நபர் தெரிவித்தார். வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு பிஸ்டோரியஸ் கதறி அழுதார்.

இதனிடையே, சம்பவத்தன்று சுடப்பட்ட காதலியை பிஸ்டோரியஸ் கடைசி நேரத்தில் காப்பாற்ற முயன்றதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

பாத்ரூமில் உட்கார்ந்த நிலையில் ரீவா ஸ்டீன்கேம்ப் சுடப்பட்டுள்ளார். தலை, இடுப்பு மற்றும் கை மற்றும் விரலில் குண்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை, பிஸ்டோரியஸ் வெளியே இழுத்து வந்துள்ளார். இருப்பினும், இதயம் மட்டும் துடித்துக் கொண்டு இருந்தது.

உடனே, அவரது வாயில் தனது வாயை வைத்து பிஸ்டோரியஸ் சுவாசம் கொடுக்க முயன்றார். ரத்தம் அதிகமாக வெளியேறியதால் காதலி இறந்தார். இத்தகவலை சம்பவத்தை முதலில் பார்த்த அருகில் வசிப்பவர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

ரீவா சுடப்பட்ட இரண்டு மணி நேரத்துக்கு முன்பு பிஸ்டோரியஸ் வீட்டில் இருந்து வாக்குவாதம் செய்த சத்தம் கேட்டுள்ளது.

பிஸ்டோரியஸ் மீது பல்வேறு பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால் இவரது பிணை (ஜாமின்) மனு மீதான விசாரணை வரும் பிப்ரவரி 19ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பிஸ்டோரியஸ் கைது செய்யப்பட்ட நிலையில், இவரை கோடிக்கணக்கில் ஒப்பந்த செய்த விளம்பர நிறுவனங்கள் விலகும் யோசனையில் இருக்கின்றன.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரக்பி வீரருடனான தொடர்பால் காதலியை கொலை செய்தாரா பிஸ்டோரியஸ்? (படங்கள்)
» காதலர் தினத்தன்று காதலியை சுட்டுக்கொன்ற பிளேடு ரன்னர் பிஸ்டோரியஸ்! (படங்கள்)
» பிஸ்டோரியஸ் பிணையில் சிக்கல்! மீண்டும் விசாரணை ஒத்திவைப்பு! Pics
» சுடப்பட்ட செய்தியாளர் ஜனாதிபதிக்கு நன்றி கூறுகிறார்
» சுடப்பட்ட செய்தியாளர் ஜனாதிபதிக்கு நன்றி கூறுகிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum