தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிஸ்டோரியஸ் பிணையில் சிக்கல்! மீண்டும் விசாரணை ஒத்திவைப்பு! Pics

Go down

பிஸ்டோரியஸ் பிணையில் சிக்கல்! மீண்டும் விசாரணை ஒத்திவைப்பு! Pics Empty பிஸ்டோரியஸ் பிணையில் சிக்கல்! மீண்டும் விசாரணை ஒத்திவைப்பு! Pics

Post  meenu Sun Mar 17, 2013 12:43 pm



6


பிஸ்டோரியஸ் பிணை மனு மீது நேற்று இரண்டாவது நாளாக விசாரணை நடந்தது. அரசு தரப்பில் இருந்து ஜாமினுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தென் ஆப்ரிக்க மாற்றுத் திறனாளி தடகள வீரரான ஒஸ்கார் பிஸ்டோரியஸ், தனது காதலி ரீவா ஸ்டீன்கேம்ப்பை சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இவரது பிணை மனு மீது நேற்று இரண்டாவது நாளாக விசாரணை நடந்தது.

பிஸ்டோரியஸ் வீட்டின் அருகில் 600 மீற்றர் தொலைவில் வசிக்கும் நபரிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அரசு தரப்பில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது.

இதில், சம்பவத்தன்று பிஸ்டோரியஸ் வீட்டில் இருந்து நீண்ட நேரமாக சண்டையிடும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. பின்பு துப்பாக்கி சத்தம் கேட்டது.

இதைத் தொடர்ந்து ஸ்டீன்கேம்ப் கதறும் சத்தமும் 17 நிமிடங்கள் கழித்து மீண்டும் மூன்று முறை துப்பாக்கியால் சுடும் சத்தமும் கேட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நடந்த விவாதத்தின் போது ஸ்டீவ்கேம்ப் பாத்ரூமுக்குள் சென்று விட்ட நிலையிலும் பிஸ்டோரியஸ் சுட்டுள்ளார்.

இந்நிலையில் தெரியாமல் சுட்டுவிட்டேன் என்று சொல்வதற்கே அர்த்தமில்லை என்று அரசு தரப்பு சட்டத்தரனி கூறினார். தவிர, பிஸ்டோரியஸ் வீட்டில் இருந்து எடுத்த தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து மற்றும் பயன்படுத்திய ஊசிகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

பின்பு பிஸ்டோரியஸ் சட்டத்தரனி, அரசு தரப்பு சட்டத்தரனியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, பிஸ்டோரியஸ் பயன்படுத்தியது ஆயுர்வேத மருந்து. அது தடை செய்யப்பட்ட பொருள் அல்ல என்றார்.

இதையடுத்து, பிணை மனு மீதான விசாரணை இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சுடப்பட்ட காதலியை காப்பாற்ற முயன்றாரா பிஸ்டோரியஸ்? Pics
» ரத்தக்கறையுடன் கிரிக்கெட் மட்டை! பிஸ்டோரியஸ் வழக்கில் புதிய திருப்பம்!
» காதலர் தினத்தன்று காதலியை சுட்டுக்கொன்ற பிளேடு ரன்னர் பிஸ்டோரியஸ்! (படங்கள்)
» கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதைக் கேட்டு பிஸ்டோரியஸ் அழுதார்
» கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதைக் கேட்டு பிஸ்டோரியஸ் அழுதார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum