ரத்தக்கறையுடன் கிரிக்கெட் மட்டை! பிஸ்டோரியஸ் வழக்கில் புதிய திருப்பம்!
Page 1 of 1
ரத்தக்கறையுடன் கிரிக்கெட் மட்டை! பிஸ்டோரியஸ் வழக்கில் புதிய திருப்பம்!
3
காதலியை சுட்டுக் கொன்ற பிஸ்டோரியஸ் வீட்டில் இருந்து ரத்தக் கறை படிந்த கிரிக்கெட் மட்டை கைப்பற்றப்பட்டுள்ளது.
தென் ஆப்ரிக்க தடகள வீரரான ஒஸ்கார் பிஸ்டோரியஸ் இரு செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட நிலையில் ஒலிம்பிக் உட்பட சர்வதேச போட்டிகளில் பங்கேற்றார்.
சமீபத்தில் தனது காதலி ரீவா ஸ்டீன்கேம்ப்பை சுட்டுக் கொன்ற வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார். திருடன் என்று நினைத்து காதலியை தவறுதலாக சுட்டுக் கொன்றதாக முதலில் செய்தி வெளியானது.
பின்னர், இவர் திட்டமிட்டு கொலை செய்ததாக நீதிமன்றத்தில் பொலிசார் குற்றம்சாட்டினர். இதையடுத்து பிணை கிடைக்காமல் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் புதிய திருப்பமாக, பிஸ்டோரியஸ் வீட்டில் ரத்தக் கறை படிந்த கிரிக்கெட் மட்டையை தென் ஆப்ரிக்க பொலிஸ் கண்டெடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் மட்டையில் நிறைய ரத்தம் படிந்திருந்ததாகவும், ஸ்டீன்கேம்ப், மண்டை ஓடு பலமாக தாக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கிரிக்கெட் மட்டை கொண்டு ஸ்டீன்கேம்ப் தலையில் பிஸ்டோரியஸ் பலமாக தாக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மறுபக்கம் தன்னை காப்பாற்றிக் கொள்ள கிரிக்கெட் மட்டையை ஸ்டீன்கேம்ப் பயன்படுத்தி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பொலிஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.
பிஸ்டோரியஸ் மீதான கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். பிணை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இவர் பங்கேற்க இருந்த தடகள போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
கொலை குற்றம் காரணமாக மிகுந்த விரக்தியில் உள்ள பிஸ்டோரியஸ் தற்கொலைக்கு முயற்சிக்க வாய்ப்பு உள்ளது. இதையடுத்து சிறையில் உள்ள இவரது ஒவ்வொரு அசைவையும் பொலிசார் கண்காணித்து வருகின்றனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நடிகர் பிரகாஷ்ராஜ் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்
» மகத்தான திருப்பம்
» திருப்பம் தரும் திருநள்ளாறு தீர்த்தம்
» இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்: மஹேல ஜயவர்தன
» விஜய், சூர்யா, மாதவன், தனுஷ், ஜெயம்ரவி நடிகர் சங்கம் சார்பில் புதிய கிரிக்கெட் அணி: இந்தி, தெலுங்கு நடிகர்களுடன் மோதல்
» மகத்தான திருப்பம்
» திருப்பம் தரும் திருநள்ளாறு தீர்த்தம்
» இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்: மஹேல ஜயவர்தன
» விஜய், சூர்யா, மாதவன், தனுஷ், ஜெயம்ரவி நடிகர் சங்கம் சார்பில் புதிய கிரிக்கெட் அணி: இந்தி, தெலுங்கு நடிகர்களுடன் மோதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum