மோர்க்குழம்பு
Page 1 of 1
மோர்க்குழம்பு
தேவையான பொருள்கள்:
தயிர் = ஒன்றரை கப்
மிளகாய் பொடி = 1ஸ்பூன்
பொட்டுக்கடலை = 3 ஸ்பூன்
சீரகப்பொடி = அரை ஸ்பூன்
இஞ்சி = காலங்குலம்
பூண்டு = 10 பல்
எலுமிச்சை பழம் = 1 மூடி
பச்சை மிளகாய் = 2
பெருங்காயம் = சிறிதளவு
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
தயிரக் கடைந்து ஒரு கப் தண்ணீர் விடவும். பொட்டுக்கடலை, இஞ்சி, உரித்த பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதையும், உப்பையும், மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, சீரகப்பொடி ஆகியவற்றை அரை கப் தண்ணீரில் கொதிக்க விடவும்.
கொதித்ததும் கடைந்த தயிரை விட்டு ஒரு கொதி விடவும். இறக்கி வைத்து கொத்தமல்லி தூவி, எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
கீறிய பச்சை மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை தாளித்துக் கொட்டி பரிமாறவும்.
சுவையான மோர்க்குழம்பு தயார். இதை ரைஸ், இட்லி, தோசை, பொங்கல், அடை, நூடுல்ஸ் ஆகியவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
தயிர் ஊட்டச்சத்து மிக்கது மற்றும் கொழுப்பை குறைக்கிறது. செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. வேனிற் கட்டி குறைகிறது. எலும்புகள் மற்றும் பற்கள் பலம் பெறும். உயர் இரத்த அழுத்தம் குறைக்க உதவுகிறது.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» மோர்க்குழம்பு
» மோர்க்குழம்பு
» சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு
» நவதானிய மோர்க்குழம்பு
» நெல்லிக்காய் மோர்க்குழம்பு
» மோர்க்குழம்பு
» சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு
» நவதானிய மோர்க்குழம்பு
» நெல்லிக்காய் மோர்க்குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum