சேப்பங்கிழங்கு சாம்பார்
Page 1 of 1
சேப்பங்கிழங்கு சாம்பார்
தேவையான பொருள்கள்:
சேப்பங்கிழங்கு = கால் கிலோ
துவரம் பருப்பு = 200 கிராம்
மிளகாய் பொடி = ஒன்றரை ஸ்பூன்
தனியா பொடி = அரை ஸ்பூன்
மஞ்சள் பொடி = சிறிதளவு
பெருங்காயம் = சிறிதளவு
கடுகு = அரை ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
துவரம் பருப்பை மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்து குழைய வேக விடவும். சேப்பங்கிழங்கை முழுதாக வேக விட்டுக் கொண்டு உரித்து துண்டு போடவும். புளியை சிறிது கெட்டியாக கரைக்கவும்.
புளித்தண்ணீரில் சேப்பங்கிழங்கு துண்டுகளை 10 நிமிடம் நனைத்து வைக்கவும். மிளகாய் பொடி, தனியா பொடியை பருப்போடு சேர்த்து உப்பு போட்டு மூடி கொதிக்க விடவும். கொதித்ததும் கிழங்கையும், புளியையும் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும்.
எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
சுவையான சேப்பங்கிழங்கு சாம்பார் தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பூரி, உப்புமா, இட்லி, பொங்கல், தோசை ஆகியவற்றோடும் பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
சேப்பங்கிழங்கில் கார்போஹைட்ரேட், புரதம், ஃபைபர் அதிகம் உள்ளது. இவை செரிமான பிரச்சினை மற்றும் கொழுப்பின் அளவை குறைக்கிறது. மேலும் நீரிழிவு, குடல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கிறது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சேப்பங்கிழங்கு சாம்பார்
» சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு
» சேப்பங்கிழங்கு பச்சடி
» சேப்பங்கிழங்கு வறுவல்
» சேப்பங்கிழங்கு வறுவல்
» சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு
» சேப்பங்கிழங்கு பச்சடி
» சேப்பங்கிழங்கு வறுவல்
» சேப்பங்கிழங்கு வறுவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum