விஸ்வரூபம் பிரச்சினை: தமிழர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும் - பாரதிராஜா ஆவேசம்
Page 1 of 1

விஸ்வரூபம் படத்திற்கு தொடர்ந்து தடை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று கமலஹசான் மதசார்பற்ற மாநிலம், நாடு தேடி போகப் போகிறேன் என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-
ஒவ்வொரு தமிழனும் வெட்கித்தலை குனிய வேண்டும். நாட்டின் கலாச்சாரம், நாகரீகம் ஆகியவற்றை எடுத்துக் காட்டுவது, எழுத்தாளனும், கலைஞனும், படைப்பாளியும்தான். அனைவருக்கும் பாலமாக இருந்து பெருமை தேடித் தருகிறவர்கள் இவர்கள்தான்.
கலைஞன் அழிந்தால் கலை அழியும்; கலை அழிந்தால் மொழி அழியும்; மொழி அழிந்தால் இனம் அழியும்; இனம் அழிந்தால் பிணம் திண்ணும் கழுகுகள்தான் பறக்கும். அப்படி ஒரு நிலை தமிழகத்துக்கு வரக்கூடாது. கலைக்காக, தன்னை முழுவதுமாக அர்ப்பணித்த ஒரு கலைஞனை கீறி ரணம் பார்த்து ரத்த ருசி பார்ப்பது தமிழகத்தின் சாபக்கேடாக முடிந்து விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.
கமல் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி ஒரு முடிவை அவர் எடுத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் வெட்கித் தலை குனிய வேண்டிய நிலை ஏற்படும். இன்னும் நீதியின் பாலும், சட்டத்தின்பாலும் நம்பிக்கையுடன் உள்ளோம்.
கண்ணகி கோபப்பட்டாள், அன்று மதுரை எரிந்தது. இன்று ஒரு கலைஞனை வேதனையுறச் செய்துள்ளார்கள். அதனால் தமிழகமே எரிந்து போய் விடுமோ என்று அஞ்சுகிறேன். கமல் என்ன தவறு செய்து விட்டான்... நடப்பு நிகழ்ச்சியைச் சொன்னான். அது தவறா? பின்லேடனையும், முல்லா உமரையும் தீவிரவாதிகள் என்று சொல்வது தவறா? கஜினி முகம்மது கொள்ளையடித்தான் என்று பேசினால் அது தவறா? அப்படியென்றால் அதைப் பாடப் புத்தகத்திலிருந்தே எடுத்து விடுங்கள். தயவு செய்து நல்ல கலைஞனை வாழ விடுங்கள். இல்லாவிட்டால் அத்தனை கலைஞர்களின் பெருமூச்சும், தீமூச்சாக மாறி விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 'விஸ்வரூபம்' பிரச்சினை: கமலஹாசனுக்கு நடிகர் அமீர்கான் ஆதரவு
» 'விஸ்வரூபம்' பட பிரச்சினை நாளை தீர்ப்பு: சமரசம் பேச நீதிபதி யோசனை
» இலங்கை தமிழர்கள் கண்பார்வை இழப்பு: நடிகை அசினுக்கு வக்கீல் நோட்டீசு; நஷ்டஈடு வழங்க வேண்டும்
» போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை தண்டிக்கப்பட வேண்டும்: நடிகர்கள் ஆவேசம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum