'விஸ்வரூபம்' பட விவகாரம்: முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று மாலை நடக்கிறது
Page 1 of 1

கமல் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம்' படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அரசு தடை விதித்தது. கடந்த 25-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் 524 தியேட்டர்களில் படத்தை திரையிட கமல் திட்டமிட்டு இருந்தார்.
தடை காரணமாக படம் வெளியாகவில்லை. இதனால் கமல் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தனி நீதிபதி தடையை நீக்கினார். அரசு அப்பீல் செய்து மீண்டும் தடை பெற்றுள்ளது. வழக்கு விசாரணை வருகிற 6-ந்தேதி நடக்க உள்ளது.
இந்த நிலையில் 'விஸ்வரூபம்' வெளியிடுவதற்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண அரசு உதவும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
கமல்ஹாசனும் முஸ்லிம் அமைப்புகளும் முன்வந்து, உட்கார்ந்து பேசி சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு சுமூக தீர்வு கண்டால் இப்படம் திரையிடுவதற்கு அனுமதிக்கப்படும் என்றும் நல்ல உடன்படிக்கைக்கு வர தமிழக அரசு அனைத்துவிதமான வசதிகளையும் செய்து தரும் என்றும் கூறினார். இதனை கமல் தரப்பிலும் முஸ்லிம் அமைப்புகள் தரப்பிலும் வரவேற்றனர்.
இதையடுத்து இன்று சென்னை கோட்டையில் பேச்சுவார்த்தைக்கான முன் ஏற்பாடுகள் நடந்தன. பகல் 12 மணியளவில் அரசு உள்துறை செயலாளர் ராஜகோபால், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரை கமலஹாசன் தரப்பில் சந்திரஹாசன், முஸ்லிம் கூட்டமைப்பு அமைப்பாளர் ஹனீபா மற்றும் சிக்கந்தர் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தைக்கு தயார் என்று தெரிவித்தனர். இதற்கான கடிதங்களையும் கொடுத்தனர். இந்த சந்திப்பிற்கு பின்னர் ஹனீபா நிருபர்களிடம் கூறியதாவது:-
விஸ்வரூபம் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று நாங்கள் உள்துறை செயலாளரிடம் இன்று கடிதம் கொடுத்தோம். இன்று மாலை 6 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கமல் தற்போது மும்பையில் இந்தி 'விஸ்வரூபம்' படத்துக்கான ரிலீஸ் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் அவர் வரவில்லை. இந்த பேச்சுவார்த்தையில் 'விஸ்வரூபம்' படத்தில் இருந்து எந்தெந்த காட்சிகளை நீக்குவது என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. இஸ்லாமிய பிரதிநிதிகள் ஏற்கனவே 'விஸ்வரூபம்' படத்தை பார்த்து விட்டதால் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் பற்றிய விவரங்களை கூறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீவிரவாதிகள், பயங்கரவாத செயல்களில் ஈடுபடும்போது முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரான் காட்டப்படுகிறது. அந்த காட்சியை நீக்க முஸ்லிம்கள் வற்புறுத்தி உள்ளனர். இதுபோல் முஸ்லிம்கள் தொழுகை செய்வதிலும் சில முரண்பட்ட சீன்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அவற்றையும் நீக்கக் கூறி வருகிறார்கள். 15 நிமிடத்தில் இருந்து 20 நிமிட காட்சிகள் வரை நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு தரப்பினரின் பேச்சுவார்த்தையில் இன்று சுமூக உடன்பாடு ஏற்படலாம் என நம்பப்படுகிறது. தீர்வு ஏற்பட்டால் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு உடனடியாக வெளியிட கமல் திட்டமிட்டு உள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஸ்வரூபம் பட விவகாரம்: மாலை 4 மணிக்கு முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை

» விஸ்வரூபம் விவகாரம்: பேச்சுவார்த்தை தொடங்கியது
» முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு: விஸ்வரூபம் படம் விரைவில் வெளியாகிறது
» இன்று சென்னை திரும்பினார்: முஸ்லிம் அமைப்பினருடன் கமலஹாசன் பேச்சுவார்த்தை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum