Published On: Sat, Feb 23rd, 2013 astrology | By admin டைவர்சில் சென்றடையும் ஜாதக அமைப்பு பலன்கள்!
Page 1 of 1
Published On: Sat, Feb 23rd, 2013 astrology | By admin டைவர்சில் சென்றடையும் ஜாதக அமைப்பு பலன்கள்!
15
astro_262_2விவாகரத்து ஏற்படுவதற்கான ஜாதக ரீதியான அறிகுறிகள்
1. சூரியன், ராகு மற்றும் சனி ஆகியவை பிரிவை ஏற்படுத்தக்கூடிய கிரகங்கள். ஜாதகரின் 12-மிடமும், 12-ம் அதிபதியும் பிரிவினைக்கு காரணமானவர்களாகும்.
2. ஒருவரது ஜாதகத்தின் 4-மிடம், வாழ்க்கைத் துணையையும், திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியை அல்லது துயரத்தைக் குறிக்குமிடம். இந்த நான்காமிடம் பலமிழந்தாலோ, 4-ம் அதிபதி அமைந்துள்ள இடம் பலமிழந்தாலோ அல்லது 4-ம் வீட்டில் சனி, சூரியன், ராகு அல்லது 12-ம் அதிபதியோ அமர்ந்திருந்தால், விவாக ரத்து ஏற்படும்.
3. 6-ம் வீடும் 12 மற்றும் 7-ம் வீடும், வழக்கு, விரோதம் ஆகியவற்றைக் குறிக்கும். பொதுவாக ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள நாம் முடிவெடுகிறோம். ஆனால், மணமுறியவை கோர்ட் தீர்மானிக்கிறது. பெரும்பாலான கேஸ்களில், 4-ம் அதிபதி 6-ம் வீட்டிலோ அல்லது 6ம் வீட்டில் 4-ம் அதிபதியுடன் சேர்ந்திருந்தாலோ பிரிவு ஏற்படும்.
4. 12-ம் அதிபதி 4-ம் அதிபதியுடன் இணைந்தாலோ அல்லது 4-ம் அதிபதி 6,8, மற்றும் 12-ம் வீடுகளில் அமர்ந்தாலோ , சுக்கிரன் அல்லது 7-ம் அதிபதி சூரியன் , ராகு அல்லது சனியின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தாலோ கண்டிப்பாக பிரிவு உண்டாகும்.
5. கன்னி லக்கினக்காரர்களுக்கு , 12-ம் அதிபதியான சூரியன் 7-ம் வீட்டில் இருந்தாலோ அல்லது 6-ம் அதிபதியான சனி 4-ம் வீட்டில் இருந்தாலோ கட்டாயம் பிரிவினை ஏற்படும். அதுபோல 4 மற்றும் 7-ம் அதிபதியான குரு 6-ம் வீட்டில் அமர்ந்தாலோ அல்லது குரு 12-ம் வீட்டில் அமர்ந்தாலோ பிரிவு நிச்சயம்.
6. 7-ம் அதிபதி12-ம் அதிபதியுடன் இணைந்து 12-ல் அமர்ந்தாலோ ,அல்லது 12-ம் அதிபதி 7-ம் திபதியுடன் இணைந்து 7-ம் வீட்டில் அமர்ந்தாலோ அல்லது 7-ம் அதிபதியும் 12-ம் அதிபதியும் பரிவர்த்தனை ஆனாலோ தம்பதிகள் பிரிவார்கள்.
7. 7-ம் அதிபதி 12-ல் இருந்து லக்கினத்தில் ராகு இருந்தாலோ அல்லது 12-ம் அதிபதி 7-ல் ராகுவுடன் இருந்தாலோ விவாகரத்தாகிவிடும்.
8. 7 மற்றும் 12-ம் அதிபதிகள் 5-ம் வீட்டில் அமர்ந்தாலும் பிரிவேற்படும்.
9. 7-ல் சுக்கிரன் அமர்ந்து 7-ம் அதிபதி 12-ல் அமர்ந்தாலும் பிரிவு தவிர்க்கமுடியாதது.
10. 12மற்றும் 7-ம் அதிபதியுடன் இணைந்து 10-ல் இருந்தாலும் கணவன்-மனைவி பிரிவர்.
11. லக்கினம் செவ்வாயாகவோ சனியாகவோ இருந்தாலும் அல்லது லக்கினத்தில் சுக்கிரன் இருந்து 7-மிடம் சூரியன், சனி அல்லது ராகுவோடு சம்பந்தப்பட்டிருந்தாலும் திருமண வாழ்க்கை தொடராது.
12. சுக்கிரன், சந்திரன் அல்லது சூரியனுடன் இணவதும் நல்லதல்ல. அதிலும் அவை 7-ல் இருந்து பிரிவுக்குரிய கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் நன்மை பயக்காது.
13. ராகு- சனி சேர்க்கை லக்கினத்தில் காணப்பட்டாலோ, அல்லது அவை 7-ல் இருந்து, 4-மிடம் பிரிவினைக் கிரகங்களால் பாதிக்கப்பட்டாலோ பிரிவு நிச்சயம்.
இப்படியாக இன்னும் பலவித காரணங்களைச் சொல்லலாம். ஜோதிடத்தில் நாட்டம் உள்ளவர்களுக்கு இந்தக் கட்டுரை விவாக ரத்து என்பதை எவ்விதமாக ஜாதகத்தில் கண்டறிய முடியும் என்பதைத் தெளிவாகக் கூறும். இந்த படைப்பு பிரத்தியேகமாக ஜோதிடமாணவர்களுக்கும் பயன்படும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எந்த மாதிரி ஜாதக அமைப்பு டைவர்சில் முடியும்?
» Published On: Tue, Mar 5th, 2013 இலங்கை / சமுதாய சீர்கேடுகள் / செய்திகள் | By admin குளித்துக்கொண்டிருந்த சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இளைஞன்!
» ஒழுக்கமின்மைக்கு உள்ள ஜாதக அமைப்பு என்ன?
» Published On: Wed, Mar 6th, 2013 சமையல் | By admin தக்காளி மற்றும் பன்னீர் சாண்ட்விச் செய்வது எப்படி..?
» 2013 புதுவருட ராசி பலன்கள் – கன்னி
» Published On: Tue, Mar 5th, 2013 இலங்கை / சமுதாய சீர்கேடுகள் / செய்திகள் | By admin குளித்துக்கொண்டிருந்த சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இளைஞன்!
» ஒழுக்கமின்மைக்கு உள்ள ஜாதக அமைப்பு என்ன?
» Published On: Wed, Mar 6th, 2013 சமையல் | By admin தக்காளி மற்றும் பன்னீர் சாண்ட்விச் செய்வது எப்படி..?
» 2013 புதுவருட ராசி பலன்கள் – கன்னி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum