அழகு பெண்ணே! சூப்பரா லிப்ஸ்டிக் போடுவது எப்படி?
Page 1 of 1
அழகு பெண்ணே! சூப்பரா லிப்ஸ்டிக் போடுவது எப்படி?
கறுப்பாக இருப்பவர்கள் மிகவும் லைட்டாகவோ அல்லது டார்க்காகவோ இல்லாமல், பொதுவான கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம். மாநிறமாக இருப்பவர்கள் நேச்சுரல் கலரில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், அழகாக இருக்கும். சிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும்.
வெயில் காலங்களில் இரண்டு கலர்களை சேர்த்து லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக இருக்கும். லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப் லைனர் மற்றும் பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும். லைனர் போட்ட பிறகு, லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை போட்டு கொண்டால், திட்டு திட்டாக இல்லாமல், ஒரே சீராக அழகாக இருக்கும்.
லிப் லைனர் பயன்படுத்தும் போது, பெரிய உதடு உள்ளவர்கள், உதடுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாக தெரியும். உதடுகள் பெரிதாக தெரிய வேண்டுமெனில், முதலில் தேவையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொள்ள வேண்டும்.
பிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவினால், உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும். உடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக அழகாக இருக்கும்.
பொதுவாக, இந்திய பெண்களின் நிறத்துக்கு மெரூன், பிங்க் மற்றும் பிரவுன் கலர் லிப்ஸ்டிக் அழகாக இருக்கும். கலர் பிடிக்காதவர்கள் நேச்சுரல் கலர் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம். நாக்கால் உதட்டைத் தடவாதீர்கள்! தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரியும்.
உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாக்களால், உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» லிப்ஸ்டிக் போடுவது எப்படி?
» எடுப்பான `லிப்ஸ்டிக்' எப்படி போடுவது?
» லிப்ஸ்டிக் எப்படி போடணும் தெரியுமா?
» மாசறு பெண்ணே வருக!
» கணனியை FORMAT செய்து WINDOWS 7 போடுவது எப்படி?
» எடுப்பான `லிப்ஸ்டிக்' எப்படி போடுவது?
» லிப்ஸ்டிக் எப்படி போடணும் தெரியுமா?
» மாசறு பெண்ணே வருக!
» கணனியை FORMAT செய்து WINDOWS 7 போடுவது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum