தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாசறு பெண்ணே வருக!

Go down

மாசறு பெண்ணே வருக!           Empty மாசறு பெண்ணே வருக!

Post  ishwarya Fri Feb 22, 2013 2:06 pm

நேற்று வரை மாசு மருவற்று பளிங்கு போலக் காட்சியளித்த கன்னங்களில், பருவோ, கட்டியோ தோன்றினால்..? நிமிடத்துக்கொரு முறை கண்ணாடி முன் நின்று அதைப் பார்த்துக் கவலைப்படுவீர்கள் தானே? வந்த வேகத்தில் காணாமல் போகிற இதற்கே இந்த நிலை என்றால், அதுவே வாழ்நாள் முழுக்க நீடிக்கிற வடுவானால்?

‘எனக்கு பிரமாதமான சருமம். பருவோ, கரும்புள்ளியோ வந்ததே இல்லை’ எனப் பெருமைப்படுகிற பெண் என்றாலும், பிரசவத்துக்குப் பிறகான தழும்புகளில் இருந்து தப்பிக்க முடியாது. இன்னும் உடல் இளைப்பதால் உண்டாகிற தழும்பு, விபத்தினால் உண்டாகிற தழும்பு என அது எப்படி இருந்தாலும், பெண்களுக்குக் கவலை அளிக்கக் கூடியதே!

தன்னம்பிக்கையையே சிதைக்கிற இத்தகைய தழும்புகளுக்கு என்னதான் தீர்வு?

‘‘தழும்புகளில் பல வகை உண்டு. குழந்தை தவழும் போது ஏற்படும் தழும்பு, கால்களை மடக்கி ஒரே பொசிஷனில் உட்கார்வதால் உண்டாகும் தழும்பு மற்றும் நிற மாற்றம், பரு வந்து போன இடத்துத் தழும்பு, அம்மைத் தழும்பு, பிரசவத்துக்குப் பிறகான தழும்பு என அடுக்கிக்கொண்டே போகலாம். எதையுமே ஆரம்பத்திலேயே கவனித்து, சிகிச்சை அளித்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்’’ என்கிறார் அழகுக்கலை ஆலோசகரும், அழகு சாதனத் தயாரிப்பாளருமான ராஜம் முரளி. எந்தெந்தத் தழும்புகளை எப்படிப் போக்கலாம் என டிப்ஸ் தருகிறார் அவர்.

பருத் தழும்பு

பருக்களைக் கிள்ளவோ, தொடவோ கூடாது. ஃபேஷியல் செய்யக் கூடாது. சாதாரணமாக வரும் பருவானது, தானாகவே சரியாகி விடும். அதைக் கிள்ளி, அழுத்தித் தொந்தரவு செய்தால்தான் பிரச்னையே! சூடான எதையும் சாப்பிட வேண்டாம். கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்க வைத்து, ஆறிய தண்ணீரைக் குடிக்கவும்.

நான்கு பல் பூண்டை அரைத்து, வலியுள்ள பழுத்த பருவின் மேல் வைக்கவும். அதற்கு மேல் கீழே குறிப்பிட்டுள்ள பேக் போடவும். சிறிது வேப்பந்தளிர் எடுத்துக் கையால் கசக்கி, சாறு எடுக்கவும். கஸ்தூரி மஞ்சள் அல்லது கடலை மாவில் விரலைத் தொட்டு, வேப்பம் சாற்றையும் தொட்டு, பரு மேல் பொட்டுப் போல வைக்கவும். பருக்கள் பரவலாக இருந்தால், இதையே முகம் முழுக்கத் தடவவும்.

அம்மைத் தழும்பு

பருக்கள் வந்து மறைந்த பிறகோ, அம்மை வந்து போன பிறகோ, சிலருக்கு முகமெல்லாம் பள்ளம் பள்ளமாக இருக்கும். வேப்பந்தளிர், புதினா, துளசி - மூன்றையும் சம அளவு எடுத்து சாறு எடுக்கவும். அதில் கடலை மாவு அல்லது பார்லி பொடி கலந்து, பள்ளமான தழும்புகளின் மேல் ஆழமாக வைத்து, 2 விரல்களால் அழுத்தி, மேல் பக்கமாக இழுத்து விடவும். தொடர்ந்து இப்படிச் செய்து வர, பள்ளங்கள் சமனாகும். அதன் பிறகு பாதாம் ஆயில் தடவி வர, சருமம் ஒரே நிறத்துக்கு மாறும்.

பொட்டு வைத்த தழும்பு

சிலருக்கு குங்குமம், சாந்து, ஸ்டிக்கர் பொட்டு என எதுவுமே ஒத்துக் கொள்ளாமல், அலர்ஜியாகி, அந்த இடம் நிறம் மாறி, தழும்பாகும். வெள்ளை எள்ளுடன், கசகசா, பயத்தம் பருப்பு சேர்த்து ரவை மாதிரி பொடித்து, பொட்டு வைக்கிற மாதிரியே ‘திக்’காக வைத்துக் கொண்டு இரவு தூங்கி, காலையில் கழுவவும்.

டீன் ஏஜ் தழும்பு

டீன் ஏஜில் தோள் பட்டையிலும், முதுகிலும் திடீரென வரி, வரியாகத் தெரிய ஆரம்பிக்கும். கருப்பாக இருப்பவர்களுக்கு வெள்ளையாகவும், வெள்ளையாக இருப்போருக்கு கருப்பாகவும் இந்தக் கோடுகள் தெரியும். இதற்கெல்லாம் எந்த சிகிச்சையும் தேவையில்லை. சமதளத் தரையில் படுத்துக் கொண்டு, மூச்சை இழுத்து, வெளியே விடுகிற பயிற்சியை செய்தாலே போதும். கைகளை கடிகாரச் சுற்றிலும், பிறகு அதற்கு எதிர் திசையிலும் சுழற்றுகிற பயிற்சியை செய்தால், கைகளில் உள்ள தழும்பு வரிகள் சரியாகும்.

பிரசவத் தழும்பு

கர்ப்பம் தரித்த 6வது மாதத்தில் இருந்து, அதாவது வயிறு பெரிதாகத் தொடங்கியதும், சருமத்தில் லேசான மாற்றம் தெரிய ஆரம்பிக்கும். தினமும் குளிக்கும் போது, வயிற்றுப் பகுதியில் நல்லெண்ணெய் தடவி, பொறுக்கும் அளவு சூடான தண்ணீரை அதன் மேல் ஸ்பிரே செய்ய வேண்டும். இது பிரசவத்துக்குப் பிறகு தழும்புகள் வராமலிருக்க உதவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» குடும்பமேன்மைக்கு கணபதி மந்திரம் குடும்ப மேன்மையைடைய தினமும் காலையில் ஜபிக்க வேண்டிய கணபதி மந்திரம் ஓம் கணபதியே வருக! ஓங்கார கணபதியே வருக!! ரீங் கணபதியே வருக!!ரீங்கார கணபதியே வருக!! கங் கணபதியே வருக!! எங்கள் குடும்பம் மேன்மையுற வசிவசி வய நமசிவாய நம கங்கனா
» கண்ணா! வருக வருக!
» தெளிவுடன் துணிவுடன் இரு பெண்ணே!
» கெளதம் மேனனின் ‘ஓமணப் பெண்ணே…’
» அழகு பெண்ணே! சூப்பரா லிப்ஸ்டிக் போடுவது எப்படி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum