தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காதலர் தினத்தில் 3 படங்கள் ரிலீஸ்

Go down

காதலர் தினத்தில் 3 படங்கள் ரிலீஸ் Empty காதலர் தினத்தில் 3 படங்கள் ரிலீஸ்

Post  ishwarya Sat Mar 16, 2013 3:57 pm


காதலர் தினமான வருகிற 14-ந்தேதி சில்லுனு ஒரு சந்திப்பு, வனயுத்தம் படங்கள் ரிலீசாகின்றன. மறுநாள் மர்டர்-3 என்ற இந்திப் படத்தை தயாரிப்பாளர் ராமநாராயணன் வாங்கி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

சில்லுனு ஒரு சந்திப்பு படத்தில் விமல், ஓவியா ஜோடியாக நடித்துள்ளனர். இன்னொரு நாயகியாக தீபா ஷா நடித்துள்ளார். ரவி லல்லின் இயக்கியுள்ளார். முக்கோண காதல் கதையாக தயாராகியுள்ளது.

வனயுத்தம் படம் சந்தன கடத்தல் வீரப்பன் பற்றிய கதை. வீரப்பன் வேடத்தில் கிஷோரும் போலீஸ் அதிகாரியாக அர்ஜுனும் நடித்துள்ளனர். வீரப்பன் மனைவி கேரக்டரில் விஜயலட்சுமி வருகிறார்.

இப்படத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. தற்போது சில சீன்கள் நீக்கப்பட்டு திரைக்கு வருகிறது.

மர்டர்-3 படம் திகில் ஆக்ஷன் கதையம்சத்தில் தயாராகியுள்ளது. ரந்தீப் ஹோடா, சாராலோரன், ஆதிதிராவ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளர். விகேஷ் பட் இயக்கியுள்ளார். தமிழகம் முழுவதும் காதலர்தின வாரத்தில் 15-ந்தேதி வெளியாகிறது.

மர்டர்-1 மற்றும் மர்டர்-2 படங்கள் 'ஏ' சான்றிதழ் பெற்று வந்தன. மர்டர்-3 படம் 'யு/ஏ' சான்றிதழ் பெற்றுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum