சாதி, மத சங்கங்கள் எதிர்த்தால் வில்லன்களாக யாரை வைத்து படம் எடுப்பது?: டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் கேள்வி
Page 1 of 1

நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வக்குமார் 'ஒன்பதுல குரு' என்ற படத்தின் மூலம் இயக்குனராகியுள்ளார். இந்த படத்தில் வினய், லட்சுமிராய், அரவிந்த் ஆகாஷ், சத்யன், பிரேம்ஜி, சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். கே இசையமைத்துள்ளார்.
ஒன்பதுல குரு படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா அண்ணாசாலையில் உள்ள தேவி தியேட்டரில் நேற்று இரவு நடந்தது. நடிகர் விஜய் வெளியிட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பெற்றுக் கொண்டார்.
விழாவில் கே.எஸ்.ரவிக்குமார் பேசியதாவது:-
அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று சொல்வதுபோல பி.டி.செல்வக்குமார் கணவு கண்டு இப்போது இயக்குனராகி விட்டார். என்னுடைய பல படங்களுக்கு அவர் மக்கள் தொடர்பாளராக இருந்தார். நிறைய பத்திரிகைகளும் நடத்தி வருகிறார். தற்போது இயக்குனராக உயர்ந்துள்ளார்.
இன்றைய தினம் படங்கள் எடுப்பது கஷ்டமான விஷயமாக இருக்கிறது. கதையில் கதாநாயகன் இருந்தால் வில்லனும் இருக்க வேண்டும். ஆனால் வில்லன் எந்த சாதியை சார்ந்தவராகவும் இருக்ககூடாது. மதத்தை சார்ந்தவராகவும் இருக்ககூடாது. வக்கீலாக, டாக்டராக, போலீசாகவும் இருக்க கூடாது. அப்படி இருந்தால் சம்பந்தப்பட்ட அமைப்புகளும், சங்கங்களும் எதிர்த்து புகார் செய்கின்றன.
அப்படியென்றால் வில்லன்களாக யாரை வைத்துதான் படங்கள் எடுப்பது. இந்திரா நகரில் வில்லன் வசிப்பதுபோல் காட்டினாலும் அந்த தெருக்காரர்கள் எதிர்க்கிறார்கள். மிருகங்களை வில்லன்களாக காட்டினாலும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு குறுக்கே வருகிறது. கரப்பான் பூச்சி, கொசு, ஈ போன்றவற்றைதான் வில்லன் கேரக்டர்களுக்கு தேர்வு செய்யவேண்டும்போல இருக்கிறது. இப்படிபட்ட சங்கடங்களையெல்லாம் மீறி வெற்றிபெற வேண்டிய நிலைமை இயக்குனர்களுக்கு இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் விஜய் பேசும்போது, பி.டி.செல்வக்குமார் இருபது வருடமாக என்னுடன் இருக்கிறார். என் வளர்ச்சிக்கு அவர் முக்கிய காரணம். இன்று இயக்குனராகி விட்டார். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். தயாரிப்பாளர்கள் எஸ்.சிவகுமார், ஆர்.சிவகுமார் இருவரும் ராசியான விநியோகஸ்தர்கள். துப்பாக்கி படம் வெற்றி பெற்றதற்காக மும்பை வந்து எனக்கு பரிசு அளித்தனர் என்றார்.
தயாரிப்பாளர்கள் அபிராமி ராமநாதன், கலைப்புலி தாணு, ஆர்.பி.சவுத்ரி, பி.எல்.தேனப்பன், கதிரேசன், தனஞ்செயன், டைரக்டர்கள் கே.வி.ஆனந்த், சமுத்திரக்கனி, நடிகர் மன்சூர் அலிகான், நடிகைகள் லட்சுமிராய், ஓவியா, சோனா, ஒளிப்பதிவாளர் செல்லத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். பி.டி.செல்வக்குமார் வரவேற்று பேசினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எதற்கெடுத்தாலும் பிரச்னை செய்தால் யாரை வைத்து படம் எடுப்பது?
» அஜித்தை வைத்து படம் தயாரிக்கும் யுவன்…?
» சதை போடுங்கள் என்றேன்: ரஜினியிடம் உடல் எடையை குறைக்க சொல்லவில்லை; டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் மறுப்பு
» “அவதார்” படம் சாயலில் ரஜினியின் “சுல்தான்” 30 நிமிட நிஜகாட்சிகளை ரவிக்குமார் இயக்குகிறார்
» அஜீத்தை வைத்து படம் பண்ணல: லிங்குசாமி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum