தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எதற்கெடுத்தாலும் பிரச்னை செய்தால் யாரை வைத்து படம் எடுப்பது?

Go down

எதற்கெடுத்தாலும் பிரச்னை செய்தால் யாரை வைத்து படம் எடுப்பது?  Empty எதற்கெடுத்தாலும் பிரச்னை செய்தால் யாரை வைத்து படம் எடுப்பது?

Post  ishwarya Wed Mar 13, 2013 11:58 am

சென்னை : காஸ்மோ அன்ட் பாஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் படம், ‘ஒன்பதுல குரு’. இதன் பாடல் மற்றும் டிரைலரை விஜய் வெளியிட்டார். விழாவில் கே.எஸ்.ரவிகுமார் பேசியதாவது: ஒரு படத்தில் ஹீரோவை காட்டும்போது, வில்லனையும் காட்ட வேண்டியிருக்கிறது. ஆனால், அந்த வில்லன் எந்த ஜாதியையோ, மதத்தையோ சேர்ந்தவனாகக் காட்டக்கூடாது என்கிறார்கள். ஒரு டாக்டராகவோ, வக்கீலாகவோ, இன்ஜினீயராகவோ, போலீசாகவோ கூட காட்ட முடியாது. அவ்வளவு ஏன்? இந்திரா நகரைச் சேர்ந்தவன் என்றும் காட்ட முடியாது. இந்த தெருவைச் சேர்ந்தவன் என்றும் சொல்ல முடியாது.

எதற்கெடுத்தாலும் பிரச்னை வருகிறது. இப்படி ஒவ்வொரு விஷயத்துக்கும் பிரச்னை செய்தால், எப்படி படம் எடுப்பது என்று தெரியவில்லை. மிருகங்களை வைத்து படம் எடுத்தால், அதற்கும் கட்டுப்பாடு. ஈயை வைத்து படம் எடுத்தது போல, இனி கொசு, கரப்பான் பூச்சி போன்றவற்றை வைத்துதான் படம் எடுக்க வேண்டும் போலிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன், கலைப்புலி எஸ்.தாணு, ஆர்.பி.சவுத்ரி, பி.எல்.தேனப்பன் உட்பட பலர் பேசினர். படத்தில் வினய், அரவிந்த் ஆகாஷ், சத்யன், லட்சுமி ராய் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, செல்லத்துரை. இசை, கே. பி.டி.செல்வகுமார் இயக்கியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum