தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுந்தர்.சி படத்தில் நடிக்கவில்லை: நயன்தாரா

Go down

சுந்தர்.சி படத்தில் நடிக்கவில்லை: நயன்தாரா Empty சுந்தர்.சி படத்தில் நடிக்கவில்லை: நயன்தாரா

Post  ishwarya Sat Mar 16, 2013 3:53 pm

நயன்தாராவை வைத்து படம் எடுக்க இயக்குனர்கள் மத்தியில் போட்டா போட்டி நடக்கிறது. பெரிய ஹீரோக்களும் தங்களுடன் ஜோடி சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.

தமிழ், தெலுங்கு உலகில் முன்னணி நடிகை அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார். காதல் சமாசாரங்களில் சிக்கி படஉலகை விட்டு சில மாதங்கள் ஒதுங்கி இருந்து விட்டு மீண்டும் வந்துள்ள அவருக்கு பழைய மவுசு குறையவில்லை.

இந்த நிலையில் சுந்தர்.சி இயக்கும் ‘அரண்மனை’ படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. சுந்தர்.சி கதை சொல்லி சம்மதிக்க வைத்து விட்டார் என்றும் கூறப்பட்டது.

இதுகுறித்து நயன்தாராவிடம் கேட்டபோது மறுத்தார். அவர் கூறியதாவது:-

சுந்தர்.சியிடம் நான் கதை கேட்கவில்லை. அவர் படத்தில் நடிக்கப் போவதாக வெளியான செய்திகள் உண்மையானவை அல்ல. கைவசம் நிறைய படங்கள் உள்ளன. வேறு படங்களுக்கு கால்ஷீட் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நயன்தாரா தற்போது அஜீத் ஜோடியாக விஷ்ணுவர்தன் இயக்கும் படத்திலும் ராஜாராணி, இது கதிர்வேலன் காதலி போன்ற படங்களிலும் நடிக்கிறார். தமிழில் ரீமேக் ஆகும் கஹானி இந்திப்பட ரீமேக்கிலும் நடிக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum