தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நட்புக்கு மரியாதை கொடுப்பவர் விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ்

Go down

நட்புக்கு மரியாதை கொடுப்பவர் விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ் Empty நட்புக்கு மரியாதை கொடுப்பவர் விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ்

Post  ishwarya Sat Mar 16, 2013 3:47 pm

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தம்பி திலீபன் வத்திக்குச்சி என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இதில் நாயகி அஞ்சலி நடிக்கிறார். கின்ஸ்லின் இயக்குகிறார். இப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவன்யூவில் நடந்தது.

விழாவில் விஜய் கலந்து கொண்டார். அவரைக்காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு கூட்டம் அதிகமாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாடல் சி.டி.யை விஜய் வெளியிட்டார். விழாவில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் பேசும்போது எனது தம்பி இந்த படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்.

பாடல் சி.டி. வெளியீட்டு விழாவில் பங்கேற்கும்படி விஜய்க்கு செல்போனில் மெசேஜ் மட்டுமே அனுப்பினேன். அவர் இங்கு வந்து கலந்து கொண்டுள்ளார். விஜய் நட்புக்கு மரியாதை கொடுப்பவர் என்றார். இதற்கு பதில் அளித்து விஜய் பேசும்போது ஏ.ஆர். முருகதாஸ் எனக்கு போனில் தகவல் அனுப்பாமல் இருந்து இருந்தாலும் இந்த விழாவுக்கு நான் வந்து இருப்பேன் என்றார். பின்னர் கதாநாயகனான திலீபனை வாழ்த்தினார். விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum