அமெரிக்க தூதரக ஊழியரை பாலியல் தொந்தரவுக்குட்படுத்தியதாக இலங்கை மருத்துவர் மீது புகார்
Page 1 of 1
அமெரிக்க தூதரக ஊழியரை பாலியல் தொந்தரவுக்குட்படுத்தியதாக இலங்கை மருத்துவர் மீது புகார்
0
ஏற்பட்ட நோவிற்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள தனியார் மருத்துவமனையொன்றை
நாடியபோது வைத்தியர் ஒருவர் தன்னை பாலியல் தொந்தரவுக்குட்படுத்தியதாக
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றும் பெண்ணொருவர்
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கை வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார்
மருத்துவமனையொன்றுக்கு கடந்த 2 ஆம் திகதி தான் சென்றதாக அப்பெண்
முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில், சோதனை அறையொன்றுக்கு தான் அழைத்துச்செல்லப்பட்டதாகவும்
அங்கு வைத்தியர் ஒருவர் தன்னை முறையற்ற விதமாக தொட்டதன்மூலம் பாலியல்
தொந்தரவு செய்ததாகவும் அப்பெண் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அந்த சோதனை அறையில் பெண் தாதியர் எவரும் இருக்கவில்லையென்றும்
வைத்தியர் இவ்வாறான விதமமாக சோதனை மேற்கொள்கிறார் என்பது புரியாமல் தான்
சங்கடத்துக்குள்ளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன
முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. சந்தேக
நபரிடமிருந்து இதுவரை வாக்குமூலம் எதையும் பெறவில்லை என பொலிஸார்
நீதிமன்றில் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை எதிர்வரும்
பெப்ரவரி மாதம் 6 திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்கும்படி பொலிஸாருக்கு
நீதவான் உத்தரவிட்டார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அமெரிக்க தூதரக ஊழியரை பாலியல் தொந்தரவுக்குட்படுத்தியதாக இலங்கை மருத்துவர் மீது புகார்
» SPB சரண் மீது பாலியல் வன்கொடுமை நடிகை சோனா புகார்! காணொளி இணைப்பு
» 3 படம் மீது மேலும் ஒரு புகார்… தனுஷ் குடும்பத்தார் மீது நட்டி குமார் வழக்கு
» தலிபான்கள் மீது, அமெரிக்க தாக்குதலை அனுமதிக்க மாட்டேன்: இம்ரான்கான்
» தூக்கத்தில் இருந்த பெண்ணை பாலியல் வல்லுறவு புரிந்த இலங்கை மாணவர்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum