தலிபான்கள் மீது, அமெரிக்க தாக்குதலை அனுமதிக்க மாட்டேன்: இம்ரான்கான்
Page 1 of 1
தலிபான்கள் மீது, அமெரிக்க தாக்குதலை அனுமதிக்க மாட்டேன்: இம்ரான்கான்
பாகிஸ்தானில் வருகிற மே 11-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி போட்டியிடுகிறது. இந்த நிலையில் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள சுவாத்தில் திரண்டு இருந்த மக்கள் மத்தியில் இம்ரான்கான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கைபர் பக்துன்கவா மற்றும் மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகளில் அமைதி நிலவ வேண்டும் . தீவிரவாதத்தை ஒழிக்க அவர்கள் (தீவிரவாதிகள்) மீது ராணுவம் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது தீர்வாகாது. தீவிரவாதிகளுடன் அரசு அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதன்முலம் அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு கூறுவதால் என்னை தீவிரவாதி என்றும், தலிபான்கான் என்றும் அழைக்கிறார்கள். லாகூரில் நடந்த பேரணியின்போது 6 அம்ச திட்டத்தை வெளியிட்டேன். அதன்படி வர இருக்கின்ற தேர்தலில் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியில் தகுதியானவர்கள் போட்டியிட டிக்கெட் வழங்கப்படும்.
மேலும் 35 வயதுக்குட்பட்ட 25 சதவீதம் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். நான் ஆட்சிக்கு வந்தால் தலிபான் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த அனுமதிக்க மாட்டேன். மக்களிடம் நான் எப்போதும் உன்மையையே பேசுவேன். மக்களுக்கு நலத்திட்டங்களை உருவாக்கி அவர்களின் வாழ்க்கை தரம் உயர பாடுபடுவேன்'' என்றார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அமெரிக்க தூதரக ஊழியரை பாலியல் தொந்தரவுக்குட்படுத்தியதாக இலங்கை மருத்துவர் மீது புகார்
» எண்டோசல்ஃபானை 2 ஆண்டுகள் அனுமதிக்க பரிந்துரை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum